Asianet News TamilAsianet News Tamil

நேருக்கு நேர் மோதுவதற்கு முன் இந்திய கேப்டனை சீண்டிவிட்ட ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடக்கிறது. 

aaron finch picks steve smith is the best player across formats in world cricket
Author
England, First Published Jun 9, 2019, 2:04 PM IST

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே சிறப்பாகத்தான் ஆடிவருகிறது. இரு அணிகளுக்கு அடுத்தபடியாக நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

இந்திய அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. ரோஹித் சர்மாவின் பொறுப்பான சதத்தால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி ஆடிய இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டி அந்த அணிக்கு மூன்றாவது போட்டி. 

aaron finch picks steve smith is the best player across formats in world cricket

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்டீஸ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய நான்கு தலைசிறந்த வீரர்களும் ஆடுகின்றனர். ஓவல் ஆடுகளம் ஹை ஸ்கோரிங் ஆடுகளம். அதில் இந்த 4 வீரர்களும் ஒரே போட்டியில் ஆடுவதால் இந்த போட்டி கண்டிப்பாக ஹை ஸ்கோரிங் போட்டியாக இருக்கும். 

இந்நிலையில், ஸ்மித் தான் உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் கருத்து தெரிவித்துள்ளார். விராட் கோலி, ஸ்மித் ஆகிய இருவருமே உலகளவில் ஒரே தராசில் வைத்து பார்க்கக்கூடிய வீரர்கள். நம்பர்களின் அடிப்படையில் என்றால் விராட் கோலி டாமினேட் செய்வார். இருவருமே மூன்றுவிதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள். 

aaron finch picks steve smith is the best player across formats in world cricket

இந்தியாவுக்கு எதிரான போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், என்னை பொறுத்தவரை ஸ்மித் தான் மூன்றுவிதமான போட்டிகளிலும் உலகளவில் சிறந்த வீரர் என்று ஃபின்ச் தெரிவித்துள்ளார். 

ஃபின்ச் சொல்வது இருக்கட்டும்.. விராட் கோலி vs ஸ்டீவ் ஸ்மித் இருவரில் இன்றைய போட்டியில் அசத்துகிறார் என்று பார்ப்போம். 

Follow Us:
Download App:
  • android
  • ios