Asianet News Tamil

#ICCWTC ஃபைனல்: இத்தனை ரிவியூஸ் தேவையா..? இதெல்லாம் ரொம்ப ஓவரு.. ஆரோன் ஃபின்ச் அதிருப்தி

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஒரு இன்னிங்ஸுக்கு 3 ரிவியூக்கள் கொடுக்கப்பட்டிருப்பது குறித்த அதிருப்தியை ஆஸி., கேப்டன் ஆரோன் ஃபின்ச் வெளிப்படுத்தியுள்ளார்.
 

aaron finch is not happy with 3 reviews for each teams playing in icc world test championship final
Author
Southampton, First Published Jun 20, 2021, 6:25 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம்(18ம் தேதி) மழையால் ரத்தானது.

2ம் நாளான நேற்று ஆட்டம் தொடங்கிய நிலையில், போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் அவ்வப்போது தடைபட்டது. 3வது செசன் கிட்டத்தட்ட முழுமையாகவே பாதிக்கப்பட்டது. அதனால் 2ம் நாள் ஆட்டத்தில் 64.4 ஓவர்கள் வீசப்பட்டன. அதில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் அடித்திருந்தது. நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த ரோஹித் 34 ரன்களிலும் கில் 28 ரன்களிலும் ஆட்டமிழக்க, புஜாரா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

கோலியும் ரஹானேவும் 3ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்த நிலையில், கோலி இன்று ரன் ஏதும் அடிக்காமல் ஜாமிசனின் பந்தில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட்டும் ஜாமிசனின் பந்தில் 4 ரன்களுக்கு நடையை கட்ட, சிறப்பாக ஆடி அரைசதத்தை நெருங்கிய ரஹானே 49 ரன்னில் ஆட்டமிழக்க, அஷ்வின் 22 ரன்களுக்கு வெளியேற, 3ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் அடித்திருந்தது.

இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் ஒரு இன்னிங்ஸில் தலா 3 ரிவியூக்கள் ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு இன்னிங்ஸிற்கு 3 ரிவியூக்கள் ரொம்ப அதிகம் என்று ஆரோன் ஃபின்ச் கருத்து தெரிவித்துள்ளார். அதுவும் இரு நாடுகளையும் சாராத பொதுவான அம்பயர்கள் இருந்தும், 3 ரிவியூக்கள் என்பது ரொம்ப அதிகம் என்று ஆரோன் ஃபின்ச் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios