Asianet News TamilAsianet News Tamil

#IPL2021 அந்த பையன் நம்ம எல்லாரையும் செம சர்ப்ரைஸ் பண்ணிட்டான்..! இளம் வீரருக்கு முன்னாள் வீரர் புகழாரம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலர் சேத்தன் சகாரியா அனைவரையும் சர்ப்ரைஸ் செய்துவிட்டார் என்று ஆகாஷ் சோப்ரா புகழ்ந்துள்ளார்.
 

aakash chopra praises young uncapped fast bowler chetan sakariya
Author
Chennai, First Published May 11, 2021, 5:11 PM IST

ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனிலும் பவுலர்களை விட புதுப்புது பேட்ஸ்மேன்கள் தான் பெரிதாக உருவெடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, இந்திய அணியிலும் இடம்பிடிப்பார்கள். டி20 போட்டிகளே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதுதான். அதிலும் ஐபிஎல் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கானதாகவே திகழ்கிறது.

ஆனால் இந்த சீசனில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் கவனம் ஈர்த்தனர். அதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத ஆவேஷ் கான், சேத்தன் சகாரியா, ஹர்ஷல் படேல் ஆகிய உள்நாட்டு பவுலர்கள் அருமையாக வீசி அதிக கவனம் ஈர்த்தனர். பும்ரா, போல்ட், ரபாடா ஆகிய சர்வதேச அளவிலான டாப் பவுலர்கள் ஐபிஎல்லில் ஆடியபோதிலும், அவர்களைவிட ஆவேஷ் கானும் ஹர்ஷல் படேலும் சகாரியாவுமே அபாரமாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

aakash chopra praises young uncapped fast bowler chetan sakariya

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இடது கை ஃபாஸ்ட் பவுலரான சேத்தன் சகாரியா, 14வது சீசனில்(நடந்தவரை) 7 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வீழ்த்திய விக்கெட்டுகள் என்னவோ குறைவுதான் என்றாலும், பெரிய பெரிய வீரர்களை வீழ்த்தினார் சகாரியா. கேஎல் ராகுல், தோனி ஆகிய பெரிய வீரர்களை வீழ்த்தினார்.

14வது சீசனின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒருவரான சகாரியா குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, சகாரியா நம் அனைவரையும் சர்ப்ரைஸ் செய்துவிட்டார். எவ்வளவு அருமையாக பந்துவீசுகிறார். இன்ஸ்விங், அவுட்ஸ்விங் ஆகிய இரண்டையுமே அபாரமாக வீசுகிறார். நல்ல வெரைட்டியும் வைத்துள்ளார். அடிவாங்கினாலும், தன்னம்பிக்கையுடன் அதிலிருந்து மீண்டெழுந்து அருமையாக வீசுகிறார். அவரது மனநிலை, டெக்னிக் ஆகியவையும் அருமையாக உள்ளது. இந்தியாவின் வளர்ந்துவரும் ஸ்டார் கிரிக்கெட்டர் சகாரியா என்று ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios