Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 ஐபிஎல் 14வது சீசனின் சொதப்பல் லெவன்..! ஆகாஷ் சோப்ராவின் அதிரடி தேர்வு

ஐபிஎல் 14வது சீசனின் சொதப்பல் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
 

aakash chopra picks underperforming eleven of ipl 2021
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 16, 2021, 7:17 PM IST

ஐபிஎல் 14வது சீசன் இந்தியாவில் பாதியும், அமீரகத்தில் பாதியும் என ஒருவழியாக வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. சிஎஸ்கே அணி 4வது முறையாக கோப்பையை வென்றது.

இந்த சீசனில் வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், வருண் சக்கரவர்த்தி ஆகிய வீரர்கள் அசத்தலாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், பாராட்டுகளையும் பெற்றனர்.

இளம் வீரர்கள் பலர் அசத்தலாக ஆடிய அதேவேளையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட/சீனியர் வீரர்கள் சிலர் மோசமாக சொதப்பினர். அப்படி சொதப்பிய வீரர்களின் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

இதையும் படிங்க - #T20WorldCup பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திரும்.. எதார்த்தத்தை ரொம்ப ஓபனா பேசிய பாக்., முன்னாள் வீரர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோனில் இருந்து தொடங்கிய ஆகாஷ் சோப்ரா, நிகோலஸ் பூரன், ரெய்னா, கேகேஆர் கேப்டன் மோர்கன், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, கைல் ஜாமிசன், டேன் கிறிஸ்டியன், அஷ்வின், புவனேஷ்வர் குமார் ஆகிய வீரர்களையும் அந்த சொதப்பல் லெவனில் தேர்வு செய்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஐபிஎல் 14வது சீசனின் சொதப்பல் லெவன்:

லியாம் லிவிங்ஸ்டோன், நிகோலஸ் பூரன், சுரேஷ் ரெய்னா, ஒயின் மோர்கன், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், க்ருணல் பாண்டியா, கைல் ஜாமிசன், டேனியல் கிறிஸ்டியன், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios