Asianet News TamilAsianet News Tamil

#SLvsIND முதல் டி20: இவங்க 11 பேரையும் இறக்கிவிடுங்க; அப்புறம் பாருங்க..! முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவனை பார்ப்போம்.
 

aakash chopra picks team india playing eleven for the first t20 against sri lanka
Author
Colombo, First Published Jul 25, 2021, 2:59 PM IST

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதலில் நடந்த 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. 

இதையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொழும்பில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியின் ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.

ஷிகர் தவானுடன் பிரித்வி ஷாவை தொடக்க வீரராகவும், மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான இளம் தேவ்தத் படிக்கல்லை 3ம் வரிசையிலும் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

aakash chopra picks team india playing eleven for the first t20 against sri lanka

சூர்யகுமார் யாதவ் 4ம் வரிசையில் பேட்டிங் ஆடலாம் என்றும், விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனையும் தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஆல்ரவுண்டர்களான பாண்டியா பிரதர்ஸை தேர்வு செய்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரையும் ஸ்பின்னர்களாக வருண் சக்கரவர்த்தி மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான்(கேப்டன்), தேவ்தத் படிக்கல், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல்பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios