Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ டி20: இப்போ இல்லைனா வேற எப்போ? அந்த பையனை டீம்ல ஆடவைங்க! ஆகாஷ் சோப்ராவின் இந்திய ஆடும் லெவன்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் தனது ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
 

aakash chopra picks his ideal playing eleven of team india for the first t20 match against new zealand
Author
Jaipur, First Published Nov 17, 2021, 3:49 PM IST

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இன்று (17), 19, 21 ஆகிய நாட்களில் 3 டி20 போட்டிகளும், அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன.

முதல் டி20 போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது. இந்திய டி20 அணியின் முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்ற பின், அவரது தலைமையில் இந்திய அணி ஆடும் முதல் போட்டி இது. தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணியின் முதல் தொடர் இது என்பதால், இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தொடர் அவர்களுக்கு மிக முக்கியமானது.

இந்த டி20 தொடரில் விராட் கோலி, பும்ரா, ஷமி, ஜடேஜா, ஹர்திக்  பாண்டியா, ஷர்துல் தாகூர் ஆகிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் தனது ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷனை தொடக்க வீரராகவும், 3ம் வரிசையில் கேஎல் ராகுலையும், 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இது அனைவரும் அறிந்த பேட்டிங் ஆர்டர் தான்.

5ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் - வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவரை எடுக்கலாம் என்ற ஆகாஷ் சோப்ரா, சீனியர் வீரர் என்ற முறையில் ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்கப்படவே அதிக வாய்ப்பிருந்தாலும், பவுலிங் ஆப்சனாகவும் இருக்கக்கூடிய வெங்கடேஷ் ஐயரை எடுக்கலாம் என்றார். மேலும், வெங்கடேஷ் ஐயரை இப்போது ஆடவைக்கவில்லை என்றால், பிறகு எப்போது என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

aakash chopra picks his ideal playing eleven of team india for the first t20 match against new zealand

2வதாக பந்துவீச நேர்ந்தால் பனிப்பொழிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், யுஸ்வேந்திர சாஹலுக்கு அது சவாலாக இருக்கும். அதனால், அஷ்வின் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரையும் ஸ்பின்னர்களாகவும், தீபக் சாஹர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார் ஆகிய மூவரையும் ஃபாஸ்ட் பவுலர்களாகவும் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர்/வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios