Asianet News TamilAsianet News Tamil

ஆல்டைம் சிஎஸ்கே லெவன்.. முன்னாள் வீரரின் சர்ப்ரைஸ் தேர்வு.. முக்கியமான வீரரை கழட்டிவிட்ட கொடுமை

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஆல்டைம் சிஎஸ்கே லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

aakash chopra picks all time chennai super kings eleven
Author
Chennai, First Published May 21, 2020, 11:00 PM IST

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி தோனி தலைமையிலான சிஎஸ்கே. ஐபிஎல்லில் இதுவரை நடந்து முடிந்துள்ள 12 சீசன்களில் 10 சீசன்களில் சிஎஸ்கே ஆடியுள்ளது. இரண்டு சீசன்களில் சூதாட்ட சர்ச்சையால் சிஎஸ்கே ஆடவில்லை. ஆடிய 10 சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்ற ஒரே அணி சிஎஸ்கே மட்டுமே. 3 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான மற்றும் வலுவான அணியாக திகழ்கிறது.

அதற்கு காரணம், சிஎஸ்கே அணியின் கோர் டீம் வலுவாக இருப்பதுதான். தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ என அந்த அணியின் கோர் டீம் மிகவும் வலுவானது. மைக் ஹசி, ஆல்பி மோர்கல், பொலிஞ்சர், ஹைடன், பிரண்டன் மெக்கல்லம் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சிறந்த வீரர்கள் சிஎஸ்கே அணியில் ஆடி வலு சேர்த்துள்ளனர். 

அதனால் தான் சிஎஸ்கே அணி, ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஆல்டைம் சிஎஸ்கே அணியை தேர்வு செய்துள்ளார். 

அந்த அணியின்  தொடக்க வீரர்களாக மைக் ஹசி மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். இவர்கள் இருவரும் 2011 ஐபிஎல் ஃபைனலில் அருமையாக ஆடி, சிஎஸ்கேவிற்கு கோப்பையை வென்று கொடுத்தனர். சிஎஸ்கேவின் சிறந்த தொடக்க ஜோடிதான் இது. ஆனால் ஹைடனும் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக ஆடியிருக்கிறார். ஆனால் அவரை சோப்ரா தேர்வு செய்யவில்லை. 

மூன்றாம் வரிசை வீரராக சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையான ரெய்னாவையும் நான்காம் வரிசை வீரராக ஷேன் வாட்சனையும் ஐந்தாம் வரிசை வீரர் - விக்கெட் கீப்பராக தோனியையும் தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா, தோனியையே கேப்டனாகவும் தேர்வு செய்தார். 

ஆல்ரவுண்டர்கள் பிராவோ, ஆல்பி மோர்கல் மற்றும் ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா, ஸ்பின்னராக மண்ணின் மைந்தன் அஷ்வினையும் ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹர் மற்றும் ஆஷிஷ் நெஹ்ராவையும் தேர்வு செய்துள்ளார். 

சிஎஸ்கே அணியில் முக்கிய பங்காற்றிய ஹைடன் மற்றும் பொலிஞ்சர் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்களை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்யவில்லை. பொலிஞ்சர் 2010 முதல் 2012 வரை சிஎஸ்கே அணியில் ஆடினார். சிஎஸ்கே அணி வென்ற மூன்று கோப்பைகளில், இரண்டு கோப்பைகள், பொலிஞ்சர் ஆடிய காலக்கட்டத்தில் வெல்லப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்யவில்லை. 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஆல்டைம் சிஎஸ்கே அணி:

மைக் ஹசி, முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, ஷேன் வாட்சன், தோனி(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஆல்பி மோர்கல், ட்வைன் பிராவோ, ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், ஆஷிஸ் நெஹ்ரா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios