Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான 30 வீரர்களை கொண்ட இந்திய அணி

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். 
 

aakash chopra picks 30 players india squad for tour of australia
Author
Chennai, First Published Jul 26, 2020, 8:48 PM IST

இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்கிறது. கடந்த 2018 சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. கடந்த முறை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் ஆடாத நிலையில், இந்த முறை அவர்கள் இருவரும் ஆடுவார்கள் என்பதுடன் மார்னஸ் லபுஷேன் என்ற மற்றொரு சிறந்த வீரரும் ஆஸ்திரேலிய அணியில் இருப்பதால், இந்திய அணிக்கு இந்த சுற்றுப்பயணம் கடும் சவாலாக இருக்கும். 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அந்த அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது இந்திய அணி. இந்த சுற்றுப்பயணத்துக்கான 30 வீரர்களை கொண்ட இந்திய அணியை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். 

ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இடம்பிடித்துவிட்டதால், அவர் கண்டிப்பாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருப்பார். அந்தவகையில், ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிதிமான் சஹா, அஷ்வின், ஜடேஜா, பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகிய வழக்கமான டெஸ்ட் வீரர்களை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. 

டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட கேஎல் ராகுலை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தொடக்க வீரராக இறக்கலாம் என்று தெரிவித்துள்ளார். வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே ஆடிவரும் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரையும் டெஸ்ட் அணியில் ஆடவைக்காலம் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆடவுள்ளதால் புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, மனீஷ் பாண்டே, க்ருணல் பாண்டியா, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாகூர், ராகுல் சாஹர், ஷிகர் தவான் ஆகிய வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆட எடுத்துள்ளார். 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த 30 வீரர்களை கொண்ட இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிதிமான் சஹா, ரிஷப் பண்ட், அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஷர்துல் தாகூர், க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios