IPL 2023: செல்ஃபிக்காக மனைவியை நெருங்கிய ரசிகர்: கோபம் கொண்ட விராட் கோலி; வைரலாகும் வீடியோ!
தனது மனைவியுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த ரசிகரால் கோபம் கொண்ட விராட் கோலி அவரிடம் நோ நோ என்று கூறி அனுஷ்கா சர்மாவும், விராட் கோலியும் காரி ஏறி புறப்பட்டுச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், கடந்த 20 ஆம் தேதி மொஹாலியில் நடந்த 27ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரண் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில், விராட் கோலி மற்றும் பாப் டூப்ளெசிஸ் இருவரும் ரன் கணக்கை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது.
விராட் கோலி 59 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழதார். அதன் பிறகு பாப் டூப்ளெசிஸ் 84 ரன்களில் வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு ப்ராப்சிம்ரன் மட்டும் ஓரளவு கை கொடுத்தார். அவர் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஜித்தேஷ் சர்மா 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார். இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
6 போட்டிக்குப் பிறகு இப்படியொரு சாதனையை படைத்த டேவிட் வார்னர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்த வெற்றியின் மூலமாக பெங்களூரு அணி 6 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்துள்ளது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 23 ஆம் தேதி நாளை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், பெங்களூருவில் தங்கியிருக்கும் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள சிடிஆர் என்ற ஒரு ரெஸ்டாரண்டிற்கு விராட் கோலி சென்றுள்ளார்.
ஐபிஎல்லில் கொடிகட்டி பறக்கும் OLD IS GOLD ஆக தங்களது திறமையை நிரூபிக்கும் சீனியர்ஸ்!
அப்போது அவர் வந்துள்ளதை அறிந்து கொண்ட ரசிகர்கள் ரெஸ்டாரண்டை சூழ்ந்து கொண்டனர். கோலியை வெளியில் வரவிடாமல் சூழ்ந்து ஆர்சிபி ஆர்சிபி ஆர்சிபி என்று கோஷம் எழுப்பினர். அதன் பிறகு பாதுகாப்பு வீரர்கள் உதவியுடன் முதலில் அனுஷ்கா சர்மா வந்தார். அவரை பின் தொடர்ந்து விராட் கோலி வந்தார். அப்போது, அனுஷ்கா சர்மா உடன் செஃல்பி எடுக்க ரசிகர் ஒருவர் முயற்சித்துள்ளார். அப்போது அவரைக் கண்ட கோலி கோபம் கொண்டு நோ நோ என்று கூறி இருவரும் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.