Asianet News TamilAsianet News Tamil

IPL 2024: ஒரு வருடத்திற்கு பிறகு விளையாடும் ஷிகர் தவான் - பஞ்சாப் கிங்ஸ் போட்டியை ஏன் பார்க்க வேண்டும்?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஷிகர் தவான், ஒரு வருடத்திற்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறார். ஏன் பஞ்சாப் கிங்ஸ் விளையாடும் போட்டிகளை பார்க்க வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க…

5 important things to watch PBKS Matches in this IPL 2024 Season 17 rsk
Author
First Published Mar 19, 2024, 5:38 PM IST

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதுவரையில் நடந்த 16 சீசன்களில் ஒரு முறை கூட பஞ்சாப் கிங்ஸ் டிராபியை கைப்பற்றவில்லை. ஒரு முறை மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேறியது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் Kings XI Punjab 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சீசனில் முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி 23 ஆம் தேதி சண்டிகரில் நடைபெறுகிறது.

ஹர்ஷல் படேல்:

ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேல் ரூ.11.75 கோடி கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக 13 போட்டிகளில் விளையாடிய ஹர்ஷல் படேல் 14 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த சீசனில் புதிய அணியில் இடம் பெற்றுள்ள ஹர்ஷல் தனது புதிய இன்னிங்ஸை தொடங்க இருக்கிறார். இதுவரையில் 91 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்ஷல் 111 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சிறந்த பந்து வீச்சாக 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

ரிலீ ரோஸோவ்:

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிலீ ரோஸோவ் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.ஏ20 தொடரில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த SA20 தொடரில் ஒரு அரைசதம் உள்பட 156 ரன்கள் எடுத்துள்ளார்.

நியூ ஹோம் கிரவுண்ட்:

பஞ்சாப் கிங்ஸ் தனது ஹோம் போட்டியை புதிதாக முல்லன்பூரில் உருவாக்கப்பட்டுள்ள மகாராஜா யாதவிந்திரா சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாட இருக்கிறது. ஐஎஸ் பிந்திரா ஸ்டேடியம் தவிர, பஞ்சாப் கிங்ஸ் அணியானது தரம்சாலா, கட்டாக், இந்தூர் ஆகிய மைதானங்களில் விளையாடியுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மைதானமானது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு அணிக்கும் ஹோம் மைதானத்தின் வின்னிங் பெர்செண்டேஜ்:

சிஎஸ்கே – எம்.ஏ.சிதம்பரம் மைதானம் – 70.31%

ஆர்.ஆர் – சவாய் மான்சிங் ஸ்டேடியம் – 63.46%

எம்.ஐ. – வான்கடே ஸ்டேடியம் – 62.82%

எஸ்.ஆர்.ஹெச்- ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் – 60.78%

ஜிடி – நரேந்திர மோடி ஸ்டேடியம் – 60%

கேகேஆர் – ஈடன் கார்டன்ஸ் – 58.02%

பஞ்சாப் கிங்ஸ் – ஐஎஸ் பிந்திரா ஸ்டேடியம் – 50.82%

ஆர்சிபி – எம்.சின்னசாமி ஸ்டேடியம் – 47.62%

டிசி – அருண்ஜெட்லி ஸ்டேடியம் – 42.86%

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – ஈகனா கிரிக்கெட் ஸ்டேடியம் – 42.86%

கேப்டன் ஷிகர் தவான்:

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு ஷிகர் தவான் விளையாடுகிறார். இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட ஷிகர் தவானுக்கு ஐபிஎல் தொடர் பஞ்சாப் அணி மட்டுமே வாய்ப்பு வழங்கி வருகிறது. கடந்த சீசனில் மட்டும் ஷிகர் தவான், 11 போட்டிகளில் விளையாடி 373 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 3 அரைசதங்கள் அடித்துள்ளார். இதுவரையில் 217 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6617 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 50 அரைசதங்கள் உள்பட 2 சதங்கள் அடித்துள்ளார். கடந்த சீசனில் 6 அன்கேப்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடியுள்ளனர்.

இளம் வீரர்கள்:

பஞ்சாப் கிங்ஸ் அணியில்

பிரின்ஸ் சவுத்ரி – ரூ.20 லட்சம்

சஷாங்க் சிங் – ரூ.20 லட்சம்

அசுடோஷ் சர்மா – ரூ.20 லட்சம்

விஸ்வநாத் பிரதாப் சிங் – ரூ.20 லட்சம்

தனய் தியாகராஜன் – ரூ.20 லட்சம்

என்று இளம் வீரர்கள் அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர,

கிறிஸ் வோக்ஸ் – ரூ.4.20 கோடி

ரிலீ ரோசோவ் – ரூ.8 கோடி

ஹர்ஷல் படேல் – ரூ. 11.75 கோடி

பஞ்சாப் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

ஷிகர் தவான், மேத்யூ ஷார்ட், ப்ராம்சிம்ரன் சிங், ஜித்தேஷ் சர்மா, சிகந்தர் ராஸா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டன், அதர்வா டைடு, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லீஸ், சாம் கரண், கஜிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சகார், ஹர்ப்ரீத் பாட்டீயா, வித்வாத் காவேரப்பா, ஷிவம் சிங்.

பஞ்சாப் கிங்ஸ் விளையாடும் போட்டிகள்:

மார்ச் 23: பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் – சண்டிகர் – பிற்பகல் 3.30 மணி

மார்ச் 25 – பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பெங்களுரு – இரவு 7.30 மணி

மார்ச் 30 – பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – லக்னோ – பிற்பகல் 7.30 மணி

ஏப்ரல் 04 – பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் – அகமதாபாத் – பிற்பகல் 7.30 மணி

Follow Us:
Download App:
  • android
  • ios