Asianet News TamilAsianet News Tamil

இங்கிலாந்து அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. உலக கோப்பை அணியில் இடம்பிடித்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர்

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 15 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 
 

3 changes in england squad and jofra archer has chance to play in world cup 2019
Author
England, First Published May 21, 2019, 4:31 PM IST

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 15 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மையான அணியாக இங்கிலாந்து அணி பார்க்கப்படுகிறது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. 

2015 உலக கோப்பையில் மோசமாக தோற்று வெளியேறிய இங்கிலாந்து அணி, அதன்பின்னர் மிகுந்த ஆக்ரோஷத்துடன் வெகுண்டெழுந்துள்ளது. இயன் மோர்கன் ஒரு கேப்டனாக, இங்கிலாந்து அணியை அபாரமாக வளர்த்தெடுத்துள்ளார். 

3 changes in england squad and jofra archer has chance to play in world cup 2019

நல்ல ஃபார்மில் எதிரணிகளை தெறிக்கவிட்டு வெற்றிகளை குவித்துவரும் இங்கிலாந்து அணி, நம்பர் 1 ஒருநாள் அணியாக திகழ்கிறது. கவாஸ்கர், பாண்டிங், ஸ்டீவ் வாக் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் இங்கிலாந்து தான் இம்முறை கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக நடந்த ஒருநாள் தொடரைக்கூட அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து 4-0 என வென்றது. உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த மூன்று வீரர்கள் நீக்கப்பட்டு புதிதாக 3 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 

3 changes in england squad and jofra archer has chance to play in world cup 2019

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வில்லி, ஜோ டென்லி ஆகிய மூவரும் நீக்கப்பட்டு வின்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், டாவ்சன் ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக ஆடிவரும் டேவிட் வில்லி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். உள்நாட்டு போட்டிகள், ஐபிஎல் ஆகியவற்றில் அபாரமாக வீசியதோடு, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக பந்துவீசிய இளம் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜோ டென்லி நீக்கப்பட்டு டாவ்சன் சேர்க்கப்பட்டுள்ளார். 

3 changes in england squad and jofra archer has chance to play in world cup 2019

ஆர்ச்சரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் சேர்க்கவில்லை என்பதே பெரும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருந்தது. அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சரை சேர்ப்பதற்காக யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் என முன்னாள் வீரர் ஃப்ளிண்டாஃப் அதிரடியாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு அணியில் இடம்கிடைத்துள்ளது. 

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி:

இயன் மோர்கன்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், பிளன்கெட், அடில் ரஷீத், டாம் கரன், மார்க் உட், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வில்லி, ஜோ டென்லி. 
 
மாற்றம் செய்யப்பட்ட இங்கிலாந்து அணி:

இயன் மோர்கன்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், பிளன்கெட், அடில் ரஷீத், டாம் கரன், மார்க் உட், வின்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், டாவ்சன்.

3 changes in england squad and jofra archer has chance to play in world cup 2019

ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் இந்த ஆண்டுதான் அறிமுகமானார். அறிமுகமான ஒருசில மாதங்களிலேயே உலக கோப்பை அணியில் தன்னை நிராகரிக்க முடியாத அளவிற்கு தனது திறமையை நிரூபித்து உலக கோப்பை அணியில் இடத்தையும் பிடித்துவிட்டார். 3 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார் ஆர்ச்சர். ஆனாலும் அவரது திறமையால் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios