பிக்பேஷ் லீக் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடந்தன. ஒரு போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியும் சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி, 19.4 ஓவரில் வெறும் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

136 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். 136 ரன்கள் என்ற எளிய இலக்கை ஈசியாக அடிக்கவிடவில்லை. அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் நட்சத்திர பவுலரான ரஷீத் கான், ஹாட்ரிக் உட்பட மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 11வது ஓவரை வீசிய ரஷீத் கான், அந்த ஓவரின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்துகளில் முறையே ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகிய இருவரையும் வீழ்த்தினார். இதையடுத்து 13வது ஓவரின் முதல் பந்தில் ஜோர்டான் சில்க்கை வீழ்த்தினார். டி20 கிரிக்கெட்டில் இது ரஷீத் கானின் 3வது ஹாட்ரிக் ஆகும். அந்த வீடியோ இதோ.. 

ரஷீத் ஹாட்ரிக் விக்கெட் போட்டாலும், இலக்கு எளிதானது என்பதால், சிட்னி சிக்ஸர்ஸ் அணி 19வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 

மற்றொரு போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. இந்த போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் ஃபாஸ்ட் பவுலரான ஹாரிஸ் ராஃப் ஹாட்ரிக் வீழ்த்தினார். முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவரில் 145 ரன்கள் அடித்தது. கடைசி ஓவரின் 2,3,4 ஆகிய பந்துகளில் முறையே மேத்யூ கில்க்ஸ், காலம் ஃபெர்குசன் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகிய மூவரையும் வீழ்த்தினார் ஹாரிஸ் ராஃப். ஒரே நாளில் பிக்பேஷ் லீக்கில், ரஷீத் கானும் ஹாரிஸ் ராஃபும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹாரிஸ் ராஃப் வீசிய ஹாட்ரிக் வீடியோ இதோ.. 

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 146 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்றது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மேக்ஸ்வெல்லின் அரைசதத்தால் 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது.