1xBet நிறுவனம் W.C.I.A. அமைப்புடன் இணைந்து சக்கர நாற்காலி கிரிக்கெட் வீரர்களுக்கு 20 விளையாட்டு சக்கர நாற்காலிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இது வீரர்களின் விளையாட்டை மேம்படுத்தவும், முன்னேற்றத்தைத் தொடரவும் உதவும்.

உலகளாவிய பந்தய நிறுவனமான 1xBet மற்றும் வீல்சேர் கிரிக்கெட் இந்தியா அசோசியேஷன் (W.C.I.A.) இணைந்து, சக்கர நாற்காலி கிரிக்கெட்டில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி தடகள வீரர்களுக்கு 20 விளையாட்டு சக்கர நாற்காலிகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் ஆண்டுக்கு 6-8 போட்டிகளில் பங்கேற்கிறார்கள். நவீன தொழில்நுட்ப சக்கர நாற்காலிகளின் விலை அதிகமாக இருப்பதால், அவற்றை இந்த வீரர்கள் பயன்படுத்தியதில்லை. இந்த முன்முயற்சி மூலம், இவர்கள் நம்பகமான சாதனங்களைப் பெறுகிறார்கள். இது இவர்களின் விளையாட்டை மேம்படுத்தவும், முன்னேற்றத்தை தொடரவும் உதவும்.

இந்த நோக்கத்தை அடைவதற்காக, 1xBet நிறுவனம் W.C.I.A. அமைப்பைத் தேர்ந்தெடுத்தது. ஏனெனில் விளையாட்டை மேம்படுத்துதல், அனைவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்குவதல் போன்ற W.C.I.A. அமைப்பின் விழுமியங்கள், 1xBet நிறுவனத்தின் நோக்கத்துடன் ஒத்துப்போகின்றன.

வீல்சேர் கிரிக்கெட் இந்தியா அசோசியேஷன் (W.C.I.A.) என்பது இந்தியாவின் முன்னோடி சங்கமும் முதன்மை அமைப்புமாகும். இது கிரிக்கெட் விளையாட விரும்பும் சக்கர நாற்காலி பயன்படுத்தும் இளம் விளையாட்டு வீரர்கள் கிரிக்கெட்டின் ஆரம்ப நிலையிலிருந்து உயர் நிலை வரை வருவதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது. W.C.I.A. இந்தியாவின் முதல் சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியை உருவாக்கிய பெருமையைக் கொண்டது.

‘’1xBet வழங்கும் இந்த ஆதரவு வெறும் சாதனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் தடை என்பது மனதில் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில் மாற்றுத் திறனுடன் விளையாடும் விளையாட்டாளர்களின் முயற்சியை அங்கீகரிப்பதும் ஆகும்’’, என W.C.I.A.-இன் பிரதிநிதி கூறுகிறார். இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்று, உலக அளவில் தங்கள் திறமைகளை நிரூபித்துள்ளனர்.

1xBet-க்கு பிரபலமான விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல, சிரமங்களை எதிர்கொண்டாலும் தங்கள் இலக்குகளை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறும் வீரர்களுக்கு உதவுவதும், அவர்கள் விரும்புவதைத் தொடர்ந்து பின்பற்றும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதும் எங்களுக்கு முக்கியம்.

விளையாட்டு வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்," என்று மார்க்கெட்டிங் துறை தலைவர் இரினா கபூர் கூறுகிறார். "விளையாட்டு ஒருவரின் பண்பை வளர்க்கின்றது, அவர்களுக்கு ஊக்கமளிக்கின்றது. மேலும், விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து விளையாடி வெல்பவர்களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும்."

இந்தியாவில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய விளையாட்டுகளின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டின் அடையாளமாக, விளையாட்டு சக்கர நாற்காலிகள் 1xBet லோகோவுடன் அடையாளப்படுத்தப்படும்.

1xBet தொடர்ந்து அதன் நலத்திட்டங்களை நடத்தவும், விளையாட்டுக்கான அணுகல்தன்மை மற்றும் தடைகளை மீறி வென்ற தனிநபர்களின் கதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொடர் ஊடக பிரச்சாரங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு நிறுவனத்தின் சமூக ஊடகங்களைப் பின்தொடரவும்.

W.C.I.A. பற்றிய அறிமுகம்

வீல்சேர் கிரிக்கெட் இந்தியா அசோசியேஷன் (W.C.I.A.) என்பது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் ஒரு லாப நோக்கற்ற பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். மேலும் W.C.I.A. ஒரு 12A/80G அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு ஆகும். ஆரம்ப கட்டத்தில் இது சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் நபர்களுக்கான மறுவாழ்வு செயல்பாடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்டது. அவர்களை விளையாட்டு போட்டிகளில் அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல், மைய நீரோட்ட சமூகத்துடன் அவர்களை இணைப்பதையும் இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்று, W.C.I.A. தன்னுடன் இணைந்த 19 மாநில சங்கங்கள் மூலம் நாடு முழுவதும் தனது திட்டங்களை நிர்வகித்து வருகிறது.

1xBet குறித்த அறிமுகம்

1xBet என்பது பந்தயத் துறையில் 18 ஆண்டுகளாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பந்தயம் கட்டும் நிறுவனமாகும். இந்த பிராண்டின் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கான விளையாட்டு நிகழ்வுகளில் பந்தயம் கட்டலாம், இந்த நிறுவனத்தின் இணையதளமும் செயலியும் 70 மொழிகளில் கிடைக்கின்றன.1xBet இன் அதிகாரப்பூர்வ பார்ட்னர் பட்டியலில் FC Barcelona, LOSC Lille, La Liga, Serie A, Durban's Super Giants, European Cricket Network, Durban's Super Giants மற்றும் பிற புகழ்பெற்ற விளையாட்டு பிராண்டுகள் மற்றும் நிறுவனங்கள் அடங்கும். இந்தியாவில் இந்த நிறுவனத்தின் தூதர்களாக பிரபல கிரிக்கெட் வீரரான ‘ஹென்ரிச் கிளாஸென்’ மற்றும் நடிகை ‘ஊர்வசி ரவுடேலா’ ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனம் IGA, SBC, G2E Asia மற்றும் EGR Nordics விருதுகள் போன்ற மதிப்புமிக்க தொழில்முறை விருதுகளுக்காக மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டு வெற்றிபெற்றுள்ளது.