இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான 16 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. வரும் 23ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை இந்த தொடர் நடக்கவுள்ளது. முதலில் டி20 தொடரும் பின்னர் ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளது.

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான 16 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் தொடருக்கான 16 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி:

ஒயின் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சாம் கரன், டாம் கரன், லியாம் டாவ்சன், ஜார்ஜ் கார்டன், லிவிங்ஸ்டோன், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.