Thai Amavasai 2024 : தை அமாவாசை அன்று இதையெல்லாம் கட்டாயம் மறக்காமல் செய்யுங்கள்!!
தை அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்க அந்நாளில் என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
தை அமாவாசை என்பது தமிழ் மாதமான தை மாதத்தில் வரும். தை அமாவாசை இறந்த மூதாதையர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு தை அமாவாசை பிப்ரவரி 9ஆம் தேதி பிரிந்த ஆன்மாக்கள் சாந்தி அடைந்த அந்நாளில் சிறப்பு பிரார்த்தனைகள், சடங்குகள் மற்றும் பிரசாதங்கள் செய்யப்படுகின்றன. மேலும் இந்நாளில் புனித நீர் நிலைகளில் நீராடி, திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பார்கள். தை அமாவாசை நாளில் இறந்தவர்களின் ஆன்மா பூமியில் உள்ள தங்கள் உறவுகளை ஆசீர்வதிக்க வருவதாக நம்பிக்கை. இதற்காக தான் அந்நாளில் விரதம் இருந்து முன்னோர்களுக்காக
சடங்குகள் மற்றும் பிற பூஜைகள் ஆற்றங்கரைகளில் அல்லது நீர் நிலைகளில் செய்யப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, அன்றைய தினம் முன்னோர்களுக்காக கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் கொடுப்பார்கள். இதன் மூலம் அவர்களின் பசியும், தாகமும் அடங்கும். எனவே, தை அமாவாசை நாளில்
என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
தை அமாவாசை அன்று செய்ய வேண்டியவை:
- தை அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. ஏனெனில், கோலங்கள் தெய்வ வழிபாட்டுக்கு உரியது மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம். எனவே, முன்னோர்களை இழந்து அவர்களின் பிரிவால் வாடும் நாம் இந்நாளில் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- அமாவாசை திதி கொடுக்கும் நாளில் ஒருபோதும் இறச்சி, வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது. அதுபோல் சமைக்கும் உணவில் கண்டிப்பாக பூசணிக்காயும் வாழைக்காயும் சேர்த்து சமைக்க வேண்டும்.
- தை அமாவாசை விரதம் இருப்பவர்கள் அந்நாள் முழுவதும் யாரிடமும் கோபமாக பேசக்கூடாது. அதற்கு பதிலாக எல்லோரிடமும் அன்பாக இருங்கள்.
- அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்ததை படையல் போட்டு அவர்களை நினைத்து வழிபட்டால், அவர்கள் மனம் திருப்தியடைந்து உங்களுக்கு நல்லாசி புரிவார்கள் என்பது நம்பிக்கை.
- அதுபோல் தை அமாவாசை அன்று படையலிட்டு முதலில் காகத்திற்கு வைக்க வேண்டும். ஏனெனில் காகம் சனி பகவானின் வாகனம். நீங்கள் வைத்த படையலை காகம் சாப்பிட்டால் சனி பகவானின் ஆசி நிச்சயம் உங்களுக்குன் கிடைக்கும். முக்கியமாக காகம் சாப்பிட்ட பிற்கு தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- விஷ்ணுவுக்கு துளசி வழிபாடு செய்வது விசேஷமானது. விஷ்ணு பித்ருக்களின் கண்கண்ட தெய்வம் என்பதால், அமாவாசை நாளில் பித்ரு வழிபாட்டின் போது, வீட்டில் இருக்கும் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலை அல்லது இலையை சமர்ப்பியுங்கள்.
- அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்பணம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.