Asianet News TamilAsianet News Tamil

கருங்கல்லில் கடவுள் சிலை .. காரணம் என்ன தெரியுமா?

நம் நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் பெரிய பெரிய கருங்கற்களால் ஆன சிலைகளே  உள்ளது. ஏன் நமது முன்னோர்கள் மூலவர் சிலை உட்பட எல்லா சிலைகளையும் கருங்கற்களால் உருவாக்கினார்கள் என்பதற்கு பின் ஒரு மிகப்பெரிய ரகசியம் மறைந்திருக்கிறது. பொதுவாகவே ஆற்றலை பொறுத்தவரை உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பன்மடங்கு அதிகம். அதனால் கருங்கல்லானது எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மை பெற்றது. 
 

Why was the statue of God made of black stone?
Author
First Published Sep 13, 2022, 11:22 AM IST

நம் நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் பெரிய பெரிய கருங்கற்களால் ஆன சிலைகளே  உள்ளது. ஏன் நமது முன்னோர்கள் மூலவர் சிலை உட்பட எல்லா சிலைகளையும் கருங்கற்களால் உருவாக்கினார்கள் என்பதற்கு பின் ஒரு மிகப்பெரிய ரகசியம் மறைந்திருக்கிறது. பொதுவாகவே ஆற்றலை பொறுத்தவரை உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பன்மடங்கு அதிகம். அதனால் கருங்கல்லானது எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மை பெற்றது. 

இத்தகைய கருங்கல்லானது நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐந்து வகையான பஞ்சபூதத்தின் தன்மைகளையும் கொண்டிருக்கிறது.  இந்த பஞ்சபூதத்தில் நீரைப் பொறுத்தவரையில், கருங்கல்லிலும் நீர் உள்ளது, அதனால் தான் கல் தன்னுடைய இயல்பான குளிர்ந்த நிலையில் இருந்து மாறாமல் இருக்கிறது. அதேபோன்று நிலம்.. பஞ்ச பூதங்களின் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லிலும் கூட  செடி கொடிகள் வளர்ந்து வருகிறது. 

அதேபோன்று நெருப்பு. கல்லில் நெருப்பின் அம்சமும் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. முன்பு கூறியபடி, நீரும்,நிலமும் கூட ஏற்றுக்கொள்ள முடியும். கல்லில் எப்படி நெருப்பு உள்ளது என சந்தேகம் எழலாம். நமது முன்னோர்கள் ஆதிகாலத்தில் நெருப்பு இல்லாமல் அவதிப்பட்டனர். அப்போது அவர்களுக்கு தோன்றியது தான் கற்களை உரசி நெருப்பை ஏற்படுத்துவது. அதன் மூலம் தான் உலகிற்கு நெருப்பு என்ற பஞ்சபூதம் கிடைத்தது. அதனால் தான் கல்லிற்கும் நெருப்பிற்கும் தொடர்பு உள்ளது. 

இதையடுத்து காற்று.. கல்லில் காற்றும் இருக்கிறது, அதனால் தான் கல்லில் தேரைகள் போன்ற ஜீவராசிகள் உயிர் வாழ்கிறது. பின்னர் ஆகாயம். மற்ற பஞ்ச பூதங்களை போல் இல்லாமல் ஆகாயத்திற்கும் கல்லிற்கும் உள்ள தொடர்பு என்பது அதன் தன்மைகளை பொறுத்து அமைகிறது.  ஆகாயத்தைப் போல், வெளியில் உள்ள சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி வைத்து பின்னர் வெளியிடும் சக்தி கல்லுக்கு இருப்பதால், தான் கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவது நமக்கு எதிரொலிக்கிறது. 

குங்குமம் தடவிய எலுமிச்சையை தலைவாசலில் வைப்பது ஏன்?

இத்தனை சிறப்பு சக்திகள் வேறு எந்த வகையான உலோகத்திலும் வெளிப்படுவதில்லை. அந்த ஆற்றலும் இருப்பதில்லை. அதனால் தான் கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட கோவிலில் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, அந்த கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மையும் அதிகரிக்கிறது. அத்தகைய கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகுவதுடன், நம் வாழ்வில் நல்ல பலன்களும் கிடைக்கிறது. இந்த காரணத்தினால் தான் கோவில்களில் உள்ள சிலைகள் கருங்கல்லில் வடிவமைக்கப்படுகிறது.  இப்போது தெரிகிறதா கருங்கல்லில் கடவுளின் திருவுருவம் அமைந்த காரணம்..

Follow Us:
Download App:
  • android
  • ios