Asianet News TamilAsianet News Tamil

குங்குமம் தடவிய எலுமிச்சையை தலைவாசலில் வைப்பது ஏன்?

பொதுவாக வீட்டை கட்டும் போது தலைவாசல் வைத்ததும், சிறப்பு பூஜைகள் எல்லாம் செய்து பின்னர் மற்ற வீட்டு வேலைகளை துவங்குகின்றனர். எப்பொழுதும் வீட்டின் வாசலில் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி குடியிருப்பதாக கூறப்படுவதால் இதுபோன்ற பூஜைகள் நடத்தப்படுகிறது.  ஏனென்றால் தலைவாசலில் இருக்கும் தெய்வங்கள் கெட்ட சக்திகளை உள்ளே வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும். இதனால் தான் இதன் சக்தியை அதிகரிப்பதற்காகவே சில பொருட்களை வாசலில் கட்டி தொங்கவிடப்படுகின்றன.
Do you know about the connection between head door and lemon?
Author
First Published Sep 13, 2022, 10:46 AM IST
பொதுவாக வீட்டை கட்டும் போது தலைவாசல் வைத்ததும், சிறப்பு பூஜைகள் எல்லாம் செய்து பின்னர் மற்ற வீட்டு வேலைகளை துவங்குகின்றனர். எப்பொழுதும் வீட்டின் வாசலில் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி குடியிருப்பதாக கூறப்படுவதால் இதுபோன்ற பூஜைகள் நடத்தப்படுகிறது.  ஏனென்றால் தலைவாசலில் இருக்கும் தெய்வங்கள் கெட்ட சக்திகளை உள்ளே வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும். இதனால் தான் இதன் சக்தியை அதிகரிப்பதற்காகவே சில பொருட்களை வாசலில் கட்டி தொங்கவிடப்படுகின்றன.

அப்படி தான் எலுமிச்சை பழத்தை இரண்டாக சம அளவில் வெட்டி குங்குமம் தடவி தலைவாசலில் வைப்பார்கள். இதனால் நம் வீட்டில் கெட்ட சக்திகள் எதுவும்  நுழையாது என்பது நம்பிக்கை. உலகம் முழுவதும் நல்ல சக்தி மற்றும் கெட்ட சக்தி என இரண்டுமே கலந்து தான் இருக்கின்றன. நமக்கு நல்லது நடக்கும் பொழுது அது நல்ல சக்தியாலும், கெட்டது நடக்கும் பொழுது அதை எதிர்மறை ஆற்றல்களாலும் நடக்கிறது என்பதை நம்மால் உணர முடியும். இதுபோன்ற எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்து, நமக்கு நல்ல சக்திகளை மட்டும் கொடுக்கக்கூடிய தன்மை எலுமிச்சை பழத்திற்கு இருக்கிறது. அதனால் தான் எலுமிச்சை பழத்தை 'தேவ கனி' என்று கூறுகின்றனர்.

இதிலும் புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தை மட்டும் திருஷ்டி கழிக்கவும், வாசலில் வைக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும். இது போல் வாசலின் இரண்டு புறங்களிலும் வெள்ளி அன்று   செய்து வைக்க ஏராளமான நன்மைகள் நடக்கும். குடும்ப சண்டை, உடல் ரீதியான பிரச்சனை, பண பிரச்சினை என எல்லாவற்றையும் தீர்க்கக் கூடிய அற்புதமான பரிகாரமாக இந்த எலுமிச்சையை தலைவாசலில் வெட்டி வைப்பது என்பது அமைத்திருக்கிறது.

அதுமட்டுமின்றி 11, 21, 51, 101 என்கிற ஒற்றைப்படை எண்ணிக்கையுடன் எலுமிச்சை பழங்களை  வரிசையாக மாலை போல கோர்த்து அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து தலைவாசல் மேலே கட்டி விடுவது உண்டு. இதுபோன்று செய்வதால் தடை இல்லாத வெற்றி கிடைக்கும்.  புதிதாக வீட்டிற்கு குடியேறுபவர்கள் மற்றும் புதுமனை புகுவிழாஅல்லது கடை, தொழில் என தொடங்குபவர்கள் இதுபோல வாரா வாரம் செய்வது மிக விசேஷமானது.

வீட்டை சுற்றி திருஷ்டிகள் நீங்கவும், மற்றவர்களுடைய பொறாமை பார்வைகளால் ஏற்படும் பிரச்சனைகளில்  இருந்து விலகவும் எலுமிச்சை பழத்துடன் ஒரு துண்டு இரும்பு கம்பி, பச்சை மிளகாய் மற்றும் கரித்துண்டு ஆகியவற்றை சேர்த்து கோர்த்து வாசலுக்கு நடுவே கட்டி தொங்க விடுவார்கள். அதிலும் மற்றவர்களுடைய தலையில் இது படாதபடி இருக்க வேண்டும். இதுபோல் வாரம் ஒரு முறை மாற்றி வர திருஷ்டி, தோஷங்கள் எதுவும் வராது. இப்படி தலை வாசலுக்கும், எலுமிச்சை பழத்திற்கும் நிறையவே தொடர்புகள் உள்ளது. 

செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு பௌமாஸ்வினி புண்யகாலம்!

எலுமிச்சை பழத்தை இனி சமையலுக்கு மட்டுமல்லாமல் தலை வாசலுக்கும் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.. கூடுதலாக எலுமிச்சையின் வாடை பூச்சிகளை வீட்டினுள் அண்டவிடாமல் தடுக்கும். எலுமிச்சையை சுற்றி நறுமணம் இருக்கும். மேலும் கிருமிகளும் அண்டாமல் தடுக்கும். இது விஞ்ஞானம் சொல்லும் தகவல் .
Follow Us:
Download App:
  • android
  • ios