ஆடி மாதம் தொடங்கியாச்சு...புதிதாக திருமணமான ஜோடிகள் ஒன்று சேரக்கூடாது..ஏன் என்று தெரியுமா?
Aadi Month 2023: புதிதாக திருமணமான தம்பதிகளை ஆடி மாதத்தில் ஏன் பிரித்து வைக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அதற்கான விளக்கம் என்ன என்பதை குறித்து இத்தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஆடி மாதம் மிகவும் சாதகமற்ற மாதமாக கருதப்படுகிறது. இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மாதம் எந்த ஒரு மங்கள நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கோ அல்லது புதிய வேலைகளைத் தொடங்குவதற்கோ பொருத்தமற்றதாக கருதுகின்றனர். ஆடி பொதுவாக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் வரும். இந்த ஆண்டு ஆடி மாதம் 17 ஜூ லை 2023, அதாவது இன்று தொடங்கி 17 ஆகஸ்ட் 2023 வரையில் முடியும். இந்த முழு காலத்திற்கும், மக்கள் எந்தவொரு சுப நிகழ்ச்சிகளையும் நடத்துவதில்லை.
அந்த வகையில், இந்நாளில் புதுமணத் தம்பதிகள் ஒருவரையொருவர் விட்டு விலகி இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், சில கலாச்சார மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, புதிதாக திருமணமான தம்பதிகள் இந்த மாதத்தில் ஒன்றாக இருக்கக்கூடாது. அது ஏன் இங்கு அறிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் கணவனும் மனைவியும் பிரிந்துள்ளனர் ஏன்?
புதிதாகத் திருமணமான தம்பதிகள் பெரும்பாலும் இந்த மாதத்தில் பிரிந்து இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் திருமணத்தின் ஆரம்ப ஆண்டுகளில், தம்பதிகள் ஆடி மாதத்தில் ஒன்றாக இருக்கக்கூடாது என்று நம்பப்படுகிறது. அதன் பின்னணியில் சில தெளிவற்ற காரணங்களை நீங்கள் கேட்கலாம். ஆனால், உண்மை என்னவெனில், பழங்காலத்தில் புதுமணத் தம்பதிகள் ஆடி மாதத்தில் ஒன்றாக இருந்தால் அவர்களுக்கு சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். சித்திரையில் அக்னி நட்சத்திரம் காரணமாக வெயில் உக்கிரமாக இருக்கும். இதனால் தாய் சேய் என இருவரின் உடல்நலம் பாதிக்கும் என்பதுதான் முக்கியமான காரணம் ஆகும். அதுமட்டுமில்லாமல் நம்முடைய முன்னோர்களின் கூற்றுப்படி, சித்திரையில் குழந்தை பிறந்தால் அது தந்தைக்கு ஆகாது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆடி பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் சிறப்பு என்ன?
எனவே தான் திருமண தம்பதிகள் ஆடி மாதம் ஒன்றாக இருப்பதில்லை. மேலும் ஆடி தொடங்கியதும் புதிதாக திருமணமான அப்பெண்ணை அவளது பிறந்த வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. அதுபோல் ஆடி ஒன்றாம் தேதி புதிய ஜோடிகளுக்கு விருந்து வழங்கும் பழக்கம் உண்டு.