Asianet News TamilAsianet News Tamil

தீபாவளி 2022 : தீபாவளியன்று எண்ணெய் குளியல் ஏன்? எப்போது செய்ய வேண்டும்..

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த ஒரு நாளில் புத்தாடைகள் அணிந்து, அசைவ உணவுகள் சமைத்து சாப்பிட்டு, பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்கிறோம். 

What pujas should be done on Diwali!!
Author
First Published Oct 21, 2022, 4:28 PM IST

பல மாநிலங்களில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு பல புராணக் கதைகள் உள்ளது. பல வகைகளிலும் இந்த பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் ஐந்து நாட்களாக வரையிலும், இன்னும் சில மாநிலங்களில் இரண்டு, மூன்று நாட்களாகவும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகை ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த ஒரு நாளில் புத்தாடைகள் அணிந்து, அசைவ உணவுகள் சமைத்து சாப்பிட்டு, பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்கிறோம். 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை, நரக சதுர்த்தசி நாள் ஐப்பசி மாதம் 7ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் சூரியன் உதயம் ஆவதற்கு முன்பாகவே எழுந்திட வேண்டும். உடல் முழுதும் நல்ல எண்ணெய் எனப்படும் எள்ளு எண்ணையை தேய்த்து சுடுநீரில் குளிக்க வேண்டும். ஏனென்றால் சிலர் எண்ணெய் தேய்த்துக்கொண்டு குளிர்ந்த தண்ணீரில் குளித்து விடுவதால், இதனால் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு காரணமாய் உள்ளது. எனவே, தீபாவளி என்றில்லாமல் எப்போது எண்ணெய் தேய்த்துக் கொண்டாலும் மிதமான  வெந்நீரில் தான் குளிக்க வேண்டும்.

தீபாவளி 2022 : நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கும் தெரியுமா?

உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை எண்ணெய் தடவி குளித்திட வேண்டும். எண்ணெய் தேய்ப்பது என்பது  உடல் முழுவதும் சொதசொதவென எண்ணெய் தடவிக் கொள்ள தேவையில்லை. எண்ணெய் உடல் முழுக்க ஒட்டியிருக்கும் அளவுக்குத் தடவி, அரை மணிநேரம் வெயிலில் இருந்து விட்டு பின்னர் குளிப்பது தான் முறையான எண்ணெய்க் குளியல். ஆனால், இரு சிலர் நடைமுறையில் இது நமக்கு சாத்தியமில்லை என்று நினைத்தால் உடலின் மூட்டு இணைப்புகளில் அதாவது உச்சந்தலை, உள்ளங்கால், உள்ளங்கை, தொப்புள், கழுத்தின் பின்புறம், முதுகின் பின்புறம், தோள்பட்டை, முட்டி போன்ற இடங்களில் எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் ஊறவிட்டுப் பின்னர் குளிக்கலாம்.மேலும் லட்சுமி கடாட்சம் உண்டாக நாயுருவி இலை சுரைக்காய் கொடி இலை போன்றவை சேர்த்து கொள்ளலாம். 

Deepavali : தீபாவளி கொண்டாட இத்தனை காரணங்களா?

கங்கை நதியில் சென்று குளிப்பது  இயலாத காரியம் என்பதால் எண்ணெய் தேய்த்து வீட்டிலேயே மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும். அன்றைய தினம் வீட்டில் இருக்கும் தண்ணீரிலும் கங்கை தேவி வீற்றிருப்பாள் என்பது ஐதிகம். அதே போன்று  எண்ணெய் குளியலுக்கு  கட்டாயம் சீயக்காய் தான் பயன்படுத்த வேண்டும்.  அன்றைய தினம் எண்ணெயில் மகாலஷ்மியும், சீயக்காயில் சரஸ்வதி தேவியும். வெந்நீரில் கங்காவும் இருப்பதாக ஐதிகம். அதனால்  இப்படி எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு முன்பாக, சிறிதளவு நீரை கையில் எடுத்துக்கொண்டு..

"ஓம் நம சிவாயை நாராயண்யை தச தோஷ 
ஹராயை கங்காயை ஷ்வாஹா" 

என்கிற மந்திரத்தை துதித்து விட்டு நீராடினால் நல்லது. பொதுவாக சாஸ்திரத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக எண்ணெய் தேய்த்து குளித்து வரக்கூடாது என்று கூறப்பட்டிருந்தாலும், நரக சதுர்தசியில் மட்டும் செய்யலாம். இதன் மூலமாய் நமது ஆரோக்கியம் பெருகுவதோடு, உடலின் சூடு குறைந்து, வியாதிகள் எல்லாம் நீங்கும். மேலும் வீட்டில் செல்வம் பெருகும்.

இதுவரை இல்லாமல் நீங்கள் புதிதாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறீர்கள் என்றால், அன்று உங்கள் உடல் சற்று சோர்வாக இருப்பது போலத்தான் தெரியும். ஆனால் நீங்கள் எண்ணெய்க் குளியலைத் தொடரத் தொடர இந்தச் சோர்வு நீங்கி, உடல் குளுமையாவதோடு, புத்துணர்ச்சியும் கிடைக்கும். அதனால், இத்தனை நாட்களாக எண்ணெய்க் குளியலை நீங்கள் எடுக்காமல் இருந்தாலும் ஒரு பிரச்சனையும் இல்லை, இந்தத் தீபாவளியை ஒரு சாக்காக வைத்து இனி எண்ணெய் குளியலை உடனடியாக தொடங்குங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios