Asianet News TamilAsianet News Tamil

Lagnam : ஜாதகத்தில் லக்னம் என்பது என்ன எப்படி கணிக்கப்படுகிறது?

ஜாதகங்கள் பார்க்க  ஜாதக பலனை தெரிந்துகொள்ள  ஜாதக கட்டங்களில் உள்ள  ல என்று குறிப்பிட்டு இருக்ககூடிய  கட்டமே  லக்னம் என்று அழைக்கப்படுகிறது.  இதை அடிப்படையாக வைத்து தான் லக்னம் பார்க்கப்படுகிறது. 
 

what is lagnam and how to find it
Author
First Published Oct 6, 2022, 5:34 PM IST

சூரிய பகவானின் நகர்வு என்பது  360 பாகைகளாக பிரிக்கப்பட்டு அதை  12 ஆக பிரித்து ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பாகை  4 நிமிடங்கள் என்றால் ஒரு ராசிக்கு 30 பாகைகள்  கணக்கிடப்பட்டு  (30 X 4) 120 நிமிடங்கள் கணக்கிடப்படுகிறது. ஒரு ராசிக்கு லக்னம் என்பது 120 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் ஆகும். இந்த நேரக்கணக்கீடு ஒவ்வொரு லக்னத்துக்குமான இந்த நேரம் கூடவோ குறையவோ செய்கிறது.  சற்று ஆழ்ந்து பார்த்தால் இது புரியும். 

ஒவ்வொரு மாதத்திலும்  சூரியன் எந்த ராசியில்  அமைந்துள்ளதோ அந்த ராசியே உதய லக்னம் என்று அழைக்கபடுகிறது.  தமிழ்மாதங்களில்  சித்திரை மாதம் சூரிய உதயத்தில் முதல் லக்கினம் ஆகும். அதன்படி   மேஷ ராசியில் தொடங்கும். வைகாசி மாதத்தில் ரிஷப லக்னத்தில் தொடங்கும் இப்படியே ஒவ்வொரு மாதத்தின் முதலில் ராசிகளின் வரிசை  தொடங்கும். 

யாராச்சும் சாபம் விட்டால் பலிச்சிடுமா? யார் சாபம் பலிக்கும்!

சித்திரை மாதம் சூரியன் தன் உச்ச வீடான மேஷத்தில் அமைந்திருப்பார்.  முதல் தேதியில் காலை 6 மணிக்கு பிறக்கும் குழந்தையின் ஜாதகத்தில் லக்னமானது மேஷமாக இருந்தால் அதே நாளில் அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து பிறக்கும் குழந்தையின் லக்னமானது ரிஷபமாக மாறியிருக்கும் ( ஒவ்வொரு ராசிக்கும் 120 நிமிடங்கள் லக்னம் என்பதால் லக்னம் மாறும்)  அப்படியானால் ஒவ்வொரு மாதத்திலும்  ஒவ்வொரு நாளிலும் லக்னமானது இரண்டு மணி நேரம் வரை இருக்கும் என்று உறுதி படுத்தவும் முடியாது. 

ஏனெனில் சித்திரை முதல் நாளில் மேஷ லக்னமானது 2 மணி நேரம் இருக்க கூடும். ஏனெனில் 30 பாகையின் கணக்கின் படி அந்த கணக்கீடு சரி. அடுத்த நாள் மேஷ லக்னத்துக்கு இருக்கவேண்டிய பாகையில் 1 குறைந்து 29 ஆக இருக்கும் இப்போது கணக்கீடு செய்தால் ( (29 X 4)   116 நிமிடங்கள் ஆகும். அதாவது 1 மணி நேரம் 56 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். 

திதி பார்ப்பது நல்லதா, கெட்டதா?

இதை மையமாக வைத்து லக்ன கணக்கு  மாறிக்கொண்டே  இருக்கும்.  அதற்கேற்ப பிறக்கும் குழந்தையின் ஜாதகத்திலும்  மாறிக்கொண்டே இருக்கும். லக்னக் கணக்கானது பாகை அளவை கொண்டு மட்டுமே கணக்கிடப்படும். இதைத்தான் ஜென்ம லக்கினம் என்று சொல்கிறோம். 

லக்னத்தை அடிப்படையாக கொண்டு தான் மற்ற ஸ்தானங்கள் கணக்கிடப்படுகிறது இந்த  லக்னம் அமையும் ராசிதான் நம் வாழ்க்கையின் அமைப்பு தத்துவம் என்பதால் லக்னத்தை கணிப்பதில் அதிக கவனமும் சரியான நேரமும் முக்கியம் என்கிறார்கள் ஆச்சார்ய பெருமக்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios