Asianet News TamilAsianet News Tamil

அங்க பிரதட்சணம் செய்யும் போது இந்த தவறை  ஒருபோதும் செய்யாதீங்க..!

அங்கபிரதட்சணம் செய்யும் போது என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

what is anga prathatchanam and how to worship in tamil mks
Author
First Published Jun 12, 2024, 9:57 AM IST

'அங்க பிரதட்சணம்' என்பது தலை, நெற்றி, கைகள், தோள் பட்டைகள், மார்பு, வயிறு, கால் முட்டிகள், பாத விரல்கள் போன்ற அவயங்கள் அனைத்தும் பூமியில் படும்படியாக வணங்கி வழிபடுவதே ஆகும். இது 'சாஷ்டாங்க நமஸ்காரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, 'எனக்கு சகலமும் நீயே' என்று கடவுளை நோக்கி சர்வ அங்கமும் படும்படி கோயில் பிரகாரத்தைச் சுற்றி வருவதும் அங்கபிரதட்சணம் ஆகும். இந்த அங்கபிரதட்சணத்தை எல்லா  கோயில்களிலும் செய்யலாம். இப்போது, அங்கபிரதட்சணம் செய்யும் போது என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

நீங்கள் அங்க பிரதட்சணம் செய்வதற்கு முன்பு உங்கள் உடலை தூய்மையாக்க நீராடி விட்டு, அந்த ஈரத்துணியுடன் பலி பீடம் முன்பு வர வேண்டும். அதன் பிறகு, கிழக்கு நோக்கி தரையில் உருண்டவாறும், மேற்கு பக்கமாக உருண்டு வந்து பலி பீடத்தில் வந்து உங்கள் வேண்டுதலை முடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பொதுவாகவே, கோவிலில் வலம் வரும்போதும் சரி, பிரதட்சிணம் செய்வதனாலும் சரி, இடமிருந்து வலமாகத்தான் வர வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இவ்வாறு பிரதட்சிணம் செய்து வணங்கினால், நாம் இயற்கையோடு இணைந்து இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

இதையும் படிங்க: தீராத பண கஷ்டம் தீர வேண்டுமா..? அப்ப இந்த வாஸ்து டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!

உங்களுக்கு தெரியுமா.. நாம் வாழும் இந்த பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் போதும் சரி, நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வரும் போதும் சரி, இடமிருந்து வலமாக தான் சுற்றுகிறது. இயற்கையின் இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான், நாமும் கோயிலில் இடமிருந்து வலமாக சுற்றி வந்து இறைவனை வணங்குகிறோம்.

நம்முடைய வாழ்க்கை என்னும் சக்கரம் சுழல்வதற்கு இயற்கை என்ற ஒரு புள்ளி வேண்டும். மேலும், அதை மையமாக வைத்தே தான் நம்முடைய வாழ்க்கையும் இயங்குகிறது. அதுமட்டுமின்றி, நம்முடைய தினசரி செயலின் ஆதாரமும், பணிகளின் மையமும் இயற்கை தான் என்பதை உணர்த்தவே, இயற்கையோடு ஒன்றிய கடவுளை மையமாக வைத்து தான் நாம் 
கோயில் சந்நிதியை சுற்றி வருகிறோம்.

இதையும் படிங்க: எந்தக் கிழமையில் எந்த நிற ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா..?

எனவே, எந்த காலத்திலும், எந்த சூழ்நிலைகளிலும், நாம் இடமிருந்து வலமாகத்தான் கோயிலை சுற்ற வணங்க வேண்டுமே தவிர, வலமிருந்து இடமாக சுற்றி வணங்க கூடாது. அது தவறு மற்றும் இயற்கைக்கு மாறானது. அதுபோல, நீங்கள் அங்க பிரதட்சணம் செய்யும் போது வேகமாக உருண்டு வரக் கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். மேலும், அங்க பிரதட்சணம் செய்யும் போது இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களை சொல்லியபடியே, மெதுவாக உருள வேண்டும். குறிப்பாக, அவயங்கள் பூமியில் பட வேண்டும். அப்போது தான் உடலிலுள்ள கர்ம பலன்கள் பூமியில் இறங்கி தெய்வ சக்தியிடம் கலந்து நம்முடைய பாவங்கள் நீக்கும் என்று  புராணங்கள் சொல்லுகிறது.

உங்களுக்கு தெரியுமா..இன்றும் பல தலங்களில்  தேவர்களும், ரிஷிகளும், தேவகணங்களும் சூட்சும வடிவில் வந்து இறைவனை தரிசிப்பதாக வரலாறு சொல்லுகிறது. புனிதமான பக்தர் செய்யும் அங்கப்பிரதட்சணத்துக்கு அதிக சக்தி உண்டு. மேலும், அங்க பிரதட்சணம் செய்பவர்களின் உடலும் உள்ளமும் தூய்மை அடையும் என்பது நம்பிக்கை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios