வைகாசி விசாகம் 2024 எப்போது..? வழிபடும் முறைகள் மற்றும் விரத நன்மைகள் இதோ!
வைகாசி விசாகம் நாளில் விரதம் இருந்து வழிபடும் முறைகள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
முருகப் பெருமான் தமிழ் கடவுளில் ஒருவராக கருதப்படுகிறார். இவருக்கென தமிழ்நாட்டில் ஆறு முக்கிய பிரபல கோயில்கள் உள்ளன. அவை 'ஆறு படை வீடு' என்று அழைக்கப்படுகிறது.
வைகாசி விசாகம் என்றால் என்ன?
வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமியும், விசாகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் தான் வைகாசி விசாகமாகும். அதுமட்டுமின்றி, வைகாசி விசாகம் முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இந்நாளில் தான் முருகப் பெருமான் அவதரித்தார் என்று புராணங்கள் சொல்லுகிறது. எனவே, இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். 27 நட்சத்திரங்களில் கிருத்திகை மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் தான் முருகனுக்குரிய மிகவும் முக்கியமான விரத வழிபாட்டு நாள் ஆகும். குறிப்பாக, விசாகம் நட்சத்திரம் ஞானத்திற்குரிய நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
வைகாசி விசாகம் 2024 எப்போது தேதி மற்றும் நேரம்?:
இந்த 2024 ம் ஆண்டு வைகாசி விசாகம் மே 23ஆம் தேதி வியாழன்கிழமை அன்று வருகிறது.
விசாகம் நட்சத்திரம் ஆரம்பம் - மே 22, 2024 அன்று காலை 7.47 மணிக்கு
விசாகம் நட்சத்திரம் முடிவது - மே 23, 2024 அன்று காலை 9.15 மணிக்கு
எனவே வைகாசி விசாக நாளில் விரதம் இருக்க நினைப்பவர்கள் மே 22 ஆம் தேதி விரதம் இருக்கலாம். ஏனெனில் அந்நாள் முழுவதும் விசாக நட்சத்திரம் உள்ளதால் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்வது சிறப்பானதாகும்.
இதையும் படிங்க: Palani Murugan: பழனி ஆண்டவர் ஆலய வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; 22ல் தேரோட்டம்
வைகாசி விசாகம் 2024 வழிபடும் முறை:
பொதுவாகவே வைகாசி விசாகத்தன்று எல்லா முருகன் கோவில்களிலும் விசேஷ பூஜைகள், வழிபாடுகள், அபிஷேகங்கள் நடக்கும். சிலர் காவடி எடுத்து வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். உங்களால் காவடி எடுக்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உண்ணாவிரதம் இருந்து அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிப்படுங்கள். மேலும் பால், நெய் போன்ற பொருட்களை முருகனுக்கு அபிஷேகம் செய்வதற்காக வாங்கிக் கொடுங்கள்.
வைகாசி விகாசம் அன்று வீட்டில் ஆறு மணிக்கு மேல் விளக்கேற்றி முருகனுக்கு விருப்பமான கந்தரப்பம் இனிப்பை நைவேந்தியமாக படைத்து வழிபட வேண்டும். இதை செய்ய முடியாதவர்கள் தேன் கலந்த பாலை வைத்து வழிபடுங்கள்.
வைகாசி விசாகம் விரத நன்மைகள்:
வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகனை நினைத்து வழிபட்டால் உங்களது பிரச்சனைகள் அனைத்தும் விலகி ஓடும் அதுமட்டுமின்றி முற்பிறவியில் நீங்கள் செய்த பாவங்கள் நீங்கும். குறிப்பாக முழுமனதுடன் முருகனை நினைத்து வழிபட்டால் உங்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D