திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்களிடம் அடாவடி செய்யும் திருநங்கைகள்.. நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்களிடம் அடாவடி வசூலில் திருநங்கைகள் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Transgenders harassing devotees coming to Tiruvannamalai Girivalam

திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்களிடம் அடாவடி வசூலில் திருநங்கைகள் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் வரும் பவுர்ணமி அன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு செல்வது வழக்கம். 

இதையும் படிங்க;- Pournami Girivalam: ஆவணி மாத பவுர்ணமி.. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்?

Transgenders harassing devotees coming to Tiruvannamalai Girivalam

தற்போது கிரிவலம் நாட்களில் மட்டுமல்ல பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கிரிவலம் வரும் பக்தர்களுக்கு திருநங்ககைள் இடையூறு ஏற்படுத்துவதாகவும், பல்வேறு குழுக்களாக பிரிந்து நின்றுக்கொண்டு அடாவடி வசூலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அப்படி காசு கொடுக்காத செல்லும் பக்தர்களை திருநங்கைகள் மிரட்டு பணம் பறிப்பதாகவும், பணம் கொடுக்கவில்லையென்றால் தரக்குறைவாக பேசுவதாகவும் கூறுகின்றனர். 

Transgenders harassing devotees coming to Tiruvannamalai Girivalam

இதனால், கிரிவலம் செல்லும் பக்தர்கள் ஒரு வித அச்சத்துடனே செல்வதாக கூறுகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும்  காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios