திருப்பதியில் இனி இவர்களுக்கு அனுமதி கிடையாது.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விஐபி பிரேக் தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய இயலாது திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tirumala Tirupati VIP Darshan Changes tvk

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து விஐபி தரிசன வழிமுறைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் மக்களவை தேர்தல், ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன.

இதையும் படிங்க: நீங்கள் கேட்டதை கொடுக்கும் கல் உப்பு பரிகாரம்... 48 நாளுக்குள் நினைத்தது நடக்கும்.. நம்புங்க!

அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் விஐபி தரிசன விதிமுறைகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திலோ அல்லது தங்கும் இடத்திலோ இனி எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறை பிரிவின் கீழ் வரும் உயரதிகாரிகளுக்கு மட்டுமே அவர்களின் பதவிகளுக்கு ஏற்ப அவர்களுக்குரிய சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  தீராத பிரச்சினைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரங்கள் இதோ!!

விஐபிகளே வந்தால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் ஜுன் மாதம் வரை இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios