Asianet News TamilAsianet News Tamil

திருநள்ளாறு கோயில் கொடிமரம் முறிவு.. பிரம்மோற்சவ கொடியேற்று விழா நிறுத்தம்!

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயிலைச் சேர்ந்த நளபுரநாயகி நளநாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா சிறப்பாக நடப்பது வழக்கம்.

Thirunallar nala narayana perumal temple flagpole broke tvk
Author
First Published Mar 3, 2024, 2:34 PM IST

காரைக்கால் திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோயில் கொடிமரம் முறிந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயிலைச் சேர்ந்த நளபுரநாயகி நளநாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா சிறப்பாக நடப்பது வழக்கம்.

இதையும் படிங்க: Panguni Uthiram 2024 : பங்குனி உத்திரம் எப்போது..? அதன் சிறப்புகள் பற்றி தெரியுமா..??

இந்நிலையில், பிரம்மோற்சவ விழாவுக்கான நிகழ்வு பக்தர்கள் மத்தியில் கொடியேற்றத்துடன் இன்று காலை 9 முதல் 10.30க்குள் தொடங்குவதற்காக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றிய போது எதிர்பாராத விதமாக  கொடிமரம் முறிந்து சேதமடைந்தது. இதனால், பிரம்மோற்சவ விழா நிறுத்தப்பட்டது. உரிய பாராமரிப்பு இல்லாத காரணத்தால் தான் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதையும் படிங்க:  Maha Shivaratri 2024 : சிவராத்திரி பற்றி அற்புதமான சில தகவல்கள் இதோ..!!

Follow Us:
Download App:
  • android
  • ios