Asianet News TamilAsianet News Tamil

கருப்பு கயிறு கட்டுவதில் இருக்கும் அறிவியல் உண்மை!!

இந்து மதத்தை சார்ந்த பலரும் கையில் கயிறு கட்டி இருப்பது வழக்கம். நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து சென்ற பல பழக்க வழக்கங்களில் கயிறு கட்டுவதும் ஒரு வழக்கம். நாமும் இந்த பழக்க வழக்கங்களை அப்படியே பின்பற்றி வருகிறோம். ஆனால் இந்த கயிற்றுக்கு பின் மறைத்திருக்கும் அறிவியல் ரகசியம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 

There is a scientific fact in tying the black rope
Author
First Published Sep 21, 2022, 3:24 PM IST

மஞ்சள், கறுப்பு, சிவப்பு என்று பல்வேறு நிறங்களில் நாம் கயிறு கட்டி வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக பெரும்பாலான நபர்கள் கருப்பு கயிறையே அதிகமாக கட்டியிருப்பார்கள். கருப்பு என்பது பலர் பயன்படுத்த விரும்பாத நிறம். அந்த நிற உடையை பலரும் வாங்கவும், அணியவும் விரும்புவதில்லை. கருப்பு நிற உடையை துக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவது வழக்கமாக வைத்துள்ளனர். 

ஆன்மீக ரீதியாக பார்க்கும் பொழுது இதுபோன்று கயிறு கட்டுவது நம்மை தீய சக்தியின் பிடியில் இருந்து காக்கும் தன்மை கொண்டவை. வெறும் கயிறு மட்டுமில்லாமல் சிலர் வெள்ளி,செம்பு, தங்கம் என்று தங்களின் வசதிக்கு ஏற்ப காப்பு செய்து அணிந்து கொள்கின்றனர். இதுவும் நம்மை காக்கும் ஒரு கவசமாக தான் செயல்படுகிறது.

பிழைப்பை கெடுத்த நினைப்பு.. ஏன் நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்!

இதைத்தவிர பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்ற மூன்றையும் கயிறாக திரித்து கையில் அணிந்து கொள்வதன் மூலமாகவும் நாம் சிறப்பான பலன்களை பெற்று கொள்ள முடியும். அறிவியல் ரீதியாக பார்க்கும் பொழுது இவை மூன்றும் மந்திர ஒளியில் இருந்து உருவாகும் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டது எனக் கூறப்படுகிறது. அதனால் இத்தகைய கயிறை நாம் கையில் கட்டிக்கொண்டு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாக அந்த மந்திரத்திற்கான முழு பலனையும் நம்மால் பெற முடியும். அதோடு நவக்கிரக கதிர் வீச்சுகளையும் இதுபோன்ற கயிறுகளும், காப்புகளும் ஈர்க்கும் தன்மை கொண்டது.  கருப்பு கயிறு மனதில் நேர்மறை சக்தியை அதிகரிக்கும். 

அதேபோன்று இந்த கயிறை அணிவதற்கு ஒரு சில வழிமுறைகளும் உள்ளது. இத்தகைய காப்பு, கயிறை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிவது தான் சிறப்பு. கைகளில் கால்களில், இடுப்பில், கழுத்தில் என்று ஏதாவது ஒரு இடத்தில்  கருப்பு கயிறு அணிவது வழக்கம்.  அதேபோன்று கருப்பு கயிறு காலில் கட்டிக் கொள்வதால் நம்மை சுற்றி இருக்கக்கூடிய தீய சக்திகள் நெருங்காது. அதுமட்டுமின்றி நம் எதிரிகள் அல்லது நம் வளர்ச்சி பிடிக்காதவர்களால் வைக்கப்படும் செய்வினை, பில்லி, சூனியம் போன்ற துஷ்ட சக்திகளிலிருந்து காக்கும். சிலரின் கெடுபலன் தரக்கூடிய கண் திருஷ்டி அண்டாது. 

புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதங்களும் அதன் நன்மைகளும்!

அதுமட்டுமல்லாமல் சனி பகவானின் கெடு பலன், பார்வை வேகத்தை இந்த கருப்பு கயிறு கட்டுப்படுத்துவதோடு, குறைக்கிறது. இந்த கருப்பு கயிறு கட்டும் போது அந்த கயிற்றில் 9 முடிச்சுகள் போடப்பட்டிருக்க வேண்டும்.  ஒவ்வொரு முடிச்சு போடும் போதும் உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வ நாமத்தை உச்சரிக்கலாம்.  ஒம் நமசிவாய அல்லது ஓம் நமோ நாராயணாய என்றும் உச்சரிக்கலாம். 

Aja Ekadasi : முன்னோர்களின் பாவத்தையும் தீர்க்குமாம் அஜா ஏகாதசி!

கருப்பு கயிறு கட்டிக் கொள்பவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் கட்டி கொள்வது நல்லது. அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டிக் கொள்ளவும். சனிக்கிழமைகளில் இந்த கயிற்றைக் கட்டிக் கொள்வது விசேஷமானது.

இந்த கருப்பு கயிற்றைக் கட்டிக் கொள்வதால் நாம் அறியாமல் நமக்கு விபத்து ஏற்பட்டாலும், பெரிய பாதிப்பு இல்லாமல் பாதுகாக்கும். உடல் ஆரோக்கிய கோளாறு உள்ளவர்கள் அனுமன் கோயில் வைத்து கட்டிக் கொண்டால் நலம் பெறலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த கயிறை கழற்றி நீர் நிலைகளில் போட்டு புதிய கயிறை மாற்றிகொள்ள வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios