சோமவார தேய்பிறை சஷ்டி... இந்த ஒரு மந்திரத்தை மனதார உச்சரித்தால்.. முருகபெருமான் ஐஸ்வர்யத்தை அள்ளி கொடுப்பார்
மாசிமாதத்தில் திங்கள் அன்று வரும் தேய்பிறை சஷ்டி ரொம்ப சிறப்பு வாய்ந்தது. இன்றைய தினம் முருகனுக்கு மந்திரங்களை சொல்லி வேண்டிக் கொண்டால் ரொம்ப நல்ல பலன்கள் கிடைக்கும்.
சோமவார தேய்பிறை சஷ்டி அன்று விரதமிருந்து வழிபட்டால் ரொம்ப நல்லது. முருகபெருமானை வழிபடுபவர்களுக்கு எப்போதும் நல்ல பலன்களும் கிடைக்கும். இன்றைய தினம் முருகனுக்குரிய மந்திரங்களை சொல்வதும், ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதும் ஏராளமான பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம்.
முருகப் பெருமானின் விரத தினமாக சஷ்டி திதியை சொல்வார்கள். பெளர்ணமியின் 6ஆவது நாள் வரும் சஷ்டி திதி இது. ஆறாவது என்ற எண் ஐஸ்வர்யத்தை தரக்கூடியது என்கிறது ஜோதிட சாஸ்திரம். இந்த எண்ணுக்கு உரியது சுக்கிரன். சுக்கிரன் அதிபதி மகாலட்சுமி தேவி. இருப்பினும் 6 என்ற நம்பரும் சஷ்டி விரதமும் முருகனுக்குரியதாக சொல்லப்படுகிறது. 'முருகா' என்ற சொல்லுக்குள் தான் மூப்பெரும் தேவர்கள் ஐக்கியமாக உள்ளார்கள். அதனால் சஷ்டி விரதம் அன்று முருகனை வழிபடுவது விசேஷமானது. இந்த நாளில் முருகபெருமானை வழிபடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: வெயில் காலத்தில் 1 'தேங்காய் பூ' சாப்பிடுங்க! இந்த 'பூ'வுக்கு பல நோய்களை விரட்டி அடிக்கும் மகிமை இருக்கு
இன்றைய தினம் விரதம் இருக்காதவர்கள் நாள் முழுவதும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் ஆகிய முருகன் மந்திரங்களை சொல்லி துதிக்கலாம். இன்றைய நாளில் முருக சிந்தனையில் லயித்து இருப்பது அவரின் அருளை முழுமையாக பெற்று தரும். 'ஓம் சரவண பவ' எனும் மந்திரம் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. இதை உச்சரித்தபடியே இருந்தால் முருகனின் அனுக்கிரகம் கிடைக்கும்.
சொல்ல வேண்டிய மந்திரங்கள்...
- 6 எழுத்து மந்திரம்... சரவண பவ
- 5 எழுத்து மந்திரம்.. ஆறுமுகம்
- 4 எழுத்து மந்திரம்.. கந்தன்
- 3 எழுத்து மந்திரம்.. முருகா
- 2 எழுத்து மந்திரம்.. வேல்
- 1 எழுத்து மந்திரம்.. ஓம்
இதையும் படிங்க: வெள்ளி மோதிரம் இந்த விரலில் அணிந்து கொண்டால் போதும்.. உங்களுக்கு புகழும் அதிர்ஷடமும் தேடி வரும்..