Asianet News TamilAsianet News Tamil

ஓம் என்னும் மந்திரத்தின் மகிமை!

மந்திரம் சொல்வதால் நான் நினைத்தவை நடந்து விடுமா? இதென்ன மாயையா?  விண்வெளி சென்று வாழ்வதற்கான வழியை தேடும் இந்த விஞ்ஞான உலகில் எப்படி? ஆம்.. அந்த விஞ்ஞானமே மாயை தான்.

The glory of the mantra Om!!
Author
First Published Oct 12, 2022, 6:48 PM IST

எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலி தான் பிரணவம் என்றழைக்கப்படுகிறது. நம் வாயைத் திறந்து உள்ளிருந்து மூச்சுக் காற்றை வெளியிடும் போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலியானது பிறக்கின்றது. அந்த ஒலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது. இப்படி பிறக்கும் ''ஓம் - ஓம்'' என்ற ஒலியை தான் பிரவணம் என்று கூறுகிறார்கள். இந்த பிரவண ஒலி உலகம் தோன்றுவதற்கு முன்பு நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் என இப்படி ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின. ஓம் என்பது பிரணவ மந்திரம் ஆகும்.

திருமூலர் இதுபற்றி திருமந்திரத்தில்
“ஓமெனு ஓங்காரத்துள்ளே ஒருமொழி
ஓமெனு ஓங்காரத்துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத்துள்ளே பலபே தம்
ஓமெனு ஓங்காரம் ஓண்முத்தி சித்தியே ” என்று கூறியிருக்கிறார்.

பித்ருதோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா.. தோஷம் குறைய இதை செய்யுங்க!

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் மூழ்கி கட்டுண்டவர்களால்தான் அதை உணரவும் முடியும்.
பிரம்மத்தை மட்டுமின்றி தன்னையும் அறிய முடியும். இவையெல்லாம் ஆன்மிக பாதையில் பயணப்படுவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று சொல்பவர்களுக்கு இறைவனும், பஞ்சபூதங்களைக்
கொண்ட பிரபஞ்சமும் இணைந்து எளிமையாக்கிய முழு மந்திரம் தான் ஓம்.

ஓம் என்னும் பிரணவ மந்திரம் அ+உ+ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கி, நம்மை ஆன்மிக உலகிற்கு அழைத்து செல்லக்கூடிய  பாதையின் முதல்படி என்று கூட சொல்லலாம். 

இதில், 
அ என்பது கடவுள
உ என்பது உலகில் வாழும் உயிர்கள்
ம் என்பது பஞ்சபூதங்கள் 

இந்த மூன்று எழுத்துக்களில் அ-வும், உ-வும் உயிருள்ள பொருள்கள். அதன் இந்த இரண்டு எழுத்துக்களும் உயிரெழுத்துக்களையும், ம் என்பது உயிரற்ற ஜடமாகிய பிரபஞ்சம் என்பதால் மகாரத்தின் மூலம் குறிக்கப்படுகிறது.

அதிர்ஷ்டம் போகலாம்.. அஷ்டலஷ்மி போகலாமா?

மேலும் நாம் அனைவரும் கருவாகிய காலத்தில் இருந்தே ஓம் என்ற உருவத்துடன் தான் பயணப்பட்டு வளர்ந்தோம். ஏன் இத்தனைக்கும் நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பான கேட்கும் திறன் கொண்ட காது கூட ஓம் வடிவில் தான் உள்ளது. ஓம் மந்திரத்தை சொல்பவன் மட்டுமில்லை கேட்பவனும் கூட அனைத்தையும் பெறுகிறான்.

இந்த ஓம் மந்திரம் பற்றி யூகி முனி தனது வைத்திய சிந்தா மணி நூலில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்..

“அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந்தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனேயோ ருருமாக்கி"

ஓம் என்பதை உச்சரிப்பதில் கூட ஒரு தாத்பரியம் உள்ளது. மனதுக்குள் உங்கள் இஷ்ட தெய்வத்தையோ, குருவையோ நினைத்து, அவர்கள் உருவத்தை உங்கள் கண்முன் நிறுத்தி, ஓ உச்சரிக்கும் போது உச்சரிப்பைக் குறைத்தும்.. ம் இன்
உச்சரிப்பை நீட்டித்தும சொல்ல வேண்டும். இவற்றோடு நாசிப்பயிற்சியையும் சேர்த்து பழக்க வேண்டும். உங்கள் கவனம் சிதறாமல் எண்ணம் முழுதும் உங்கள் இஷ்ட தெய்வத்தை மட்டுமே நினைக்க வேண்டும். 

வீட்டில் துர்சக்திகள் வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!

இந்த மந்திரத்தை உச்சரித்தால் நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் தூண்டப்பட்டு நமக்குள் பெரிய மாறுதலை ஏற்படுத்தும்.  நமது கவனத்தைச் சிதறவிட செய்யாது. மன அழுத்தம் என்னும் பாதிப்பிலிருந்து மீள செய்யும். ஆம் மனிதனுக்குள் எப்போதும் தெய்வ சக்தியும், அசுர சக்தியும் போட்டி போட்டு கொண்டே இருக்கும். அசுரசக்தியை வெல்லும் சக்தி தான் ஓம் எனும் மந்திரம். 

ஓம் என்னும் மந்திரத்தை ஒருமுகத்துடன் காலை மற்றும் மாலை 15 நிமிடங்கள் கூறி வந்தால் ஆன்மிக பேரின்பத்தை உங்களால் உணர முடியும்

Follow Us:
Download App:
  • android
  • ios