Asianet News TamilAsianet News Tamil

அதிர்ஷ்டம் போகலாம்.. அஷ்டலஷ்மி போகலாமா?

ஒருவன் மாமனிதனாக எப்போது உணரப்படுகிறான் என்றால், இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம் என்று என்ன சூழல்கள் இருந்தாலும், மனம் தளராமல் தன்னிலை மறக்காமல் வாழும் போது தான். இந்த மாமனிதன் என்ற பெயர் அனைவருக்கும் எளிதாக கிடைப்பதில்லை. அப்படியே எளிதில் கிடைத்தாலும் அதனை அவன் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு பக்குவம் அடைவதில்லை.
 

A Spiritual Story - Luck and Ashta Lakshmi
Author
First Published Oct 12, 2022, 4:40 PM IST

ஒருவன் மாமனிதனாக எப்போது உணரப்படுகிறான் என்றால், இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம் என்று என்ன சூழல்கள் இருந்தாலும், மனம் தளராமல் தன்னிலை மறக்காமல் வாழும் போது தான். இந்த மாமனிதன் என்ற பெயர் அனைவருக்கும் எளிதாக கிடைப்பதில்லை. அப்படியே எளிதில் கிடைத்தாலும் அதனை அவன் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு பக்குவம் அடைவதில்லை.

அனைவரும் பக்குவத்துடன் நடந்து கொண்டால் வாழ்வில் எப்படி மேன்மையடைந்து மாமனிதன் ஆகலாம் என்பதற்கு ஒரு கதை உண்டு.

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். எப்போதும் குறையாத செல்வம் பெற்றவனாக அவன் இருந்தான். அவன் மக்களை சிறப்போடு கவனித்து வந்ததோடு, தானம் மற்றும் தருமம் என்று அனைத்தையும் செய்து மக்களின் அன்பையும் பெற்று மகிழ்வோடு வாழ்ந்து வந்தான். அதற்கு முக்கிய காரணம் அஷ்ட லட்சுமிகளும் அவன் வீட்டில் குடி புகுத்திருந்தனர்.

நல்ல மனைவி, சிறந்த குழந்தை, அரண்மனை போன்ற வீடு என்று சீரும் சிறப்போடும் வாழ்ந்து வந்த அவனுக்கு அடி சறுக்கியது. அவன் செய்து வந்த தொழிலில் சரிவு ஏற்பட, அது அவன் சாம்ராஜ்ஜியத்தை பதம் பார்த்தது. 

நாளடைவில் இது சரியாகி விடும் என்ற அவனது எண்ணமும் தவிடு பொடியாகியது. அவனும் இதிலிருந்து மீண்டுவர பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்தான். மேலும் இவனின் முயற்சிகளுக்கு அவனின் உறவுகளும், நண்பர்களும், ஊர் மக்களும் அவனுக்கு உதவி வந்தார்கள். மனம் தளராமல் தொடர்ந்து முயற்சித்த அவனுக்கு இறுதியாய் கிடைத்தது வறுமை.

நற்தேவதைகளும், துர்தேவதைகளும்... வாழ்க்கையில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!

இறுதியில் அவனிடத்தில் ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் ஊர் மக்களும் கரைந்து செல்ல தொடங்கினர். சென்ற அனைவரையும் தனது இன்முகத்துடன் அனுப்பி வைத்தான். அடுத்தடுத்தது உறவினர்கள் கூட்டமும் ஏதோ ஒரு காரணம் சொல்லி கரைந்து சென்றனர். அவர்களிடமும் முகம் காட்டாமல்
புன்னகையுடனே வழியனுப்பினான். இறுதியாக நண்பர்கள் கூட்டம் நழுவிய போதும் நட்பு பாராட்டி அனுப்பினான்.

அதுவரை வாழ்க்கையில் சொர்க்கத்தை மட்டுமே அனுபவித்த அக்குடும்பம் வறுமை என்னும் அரக்கனின் பிடியில் சிக்கியது. எனினும் அவன் மனம் தளரவில்லை. அஷ்ட லட்சுமிகள் குடியிருந்த அவன் வீட்டில் அதுவரை குடியேறாமல் இருந்த மூதேவி மெல்ல எட்டிப்பார்த்தாள். தானத்தையும், தர்மத்தையும், மகிழ்ச்சியையும் ஒரு சேர அந்த வீட்டில் கண்ட அஷ்டலஷ்மிகள் அவ்வீட்டின் துரதிஷ்டத்தைக் கண்டு வெளியேற முடிவு செய்து அவனிடம் அனுமதி கேட்டது. 

அத்தனை இன்னல்கள் வந்தபோதும் அனைவரும் விட்டு சென்ற போதும் அமைதியாக இருந்த அவன் அழத்தொடங்கினான். என்னை விட்டு செல்வம் போயிற்று... தானம் தர்மமும் செய்ய முடியாமல் போயிற்று... சுற்றமும், சூழலும் கரைந்து போனார்கள்... நண்பர்கள் பிரிந்து சென்றார்கள்... அப்போதெல்லாம் நீ என்னுடன் இருக்கிறாய் என்னும் தைரியத்தில் இருந்தேன். 

தலையெழுத்தை மாற்றக்கூடிய சரபேஸ்வர வழிபாடு!

 நீ மட்டும் என்னை விட்டு சென்று விடாதே என்று கதறினானாம். மனமிறங்கிய மஹாலஷ்மி அவன் வீட்டிலேயே வசிக்க தொடங்கியதாம். நமக்கு இந்த
வீட்டில் வேலையில்லை என்று தரித்தரமும், மூதேவியும் வெளியேறியதாம். மீண்டும் செல்வங்கள் கொழிக்க உற்றார், உறவினர்களை அரவணைத்து ஊர் போற்ற வாழ்ந்தானாம் அவனுக்கு தான் லஷ்மி உடன் இருக்கிறாளே...

Follow Us:
Download App:
  • android
  • ios