Asianet News TamilAsianet News Tamil

நற்தேவதைகளும், துர்தேவதைகளும்... வாழ்க்கையில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!

பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும். அதிலும் ஒரு மனிதனை இன்னொரு மனிதனிடம் இருந்து வேறுபட்டு காட்டுவது அவரவரின் எண்ணங்கள் தான். அந்த வகையில் கடலும் அலையும் எப்படி ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு உள்ளதோ அதேபோன்று தான் ஒவ்வொரு மனிதனுக்கும் நேர்மறையான எண்ணங்கள், எதிர்மறையான எண்ணங்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு படாத பாடுபடுத்தும்.
 

do you know about good and bad angels
Author
First Published Oct 12, 2022, 4:17 PM IST

ஒரு மனிதனின் பிறந்ததிலிருந்தே அவனுக்கு கற்பிக்கப்படும் பாடம் நல்லவற்றைச் சொல்ல வேண்டும். நல்லவனவற்றை மட்டுமே பேச வேண்டும் என்று தான். நமக்கே தெரியாமல் நம்மைச்சுற்றி தேவதைகள், தேவதூதர்கள் இருப்பார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அப்படி சொல்வதற்கெல்லாம் ததாஸ்து அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுப்பார்கள். அதனால் நாம் நல்லது சொன்னால் நல்லதே நடக்கும். 

மனிதனின் வாழ்க்கையில் நற்தேவதைகளும், துர்தேவதைகளும் மாறி மாறி வழிநடத்தும். அதில் நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று
தேவதைகளும், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று துர்தேவதைகளும் மாறி மாறி வழி நடத்துவதால் தான் சமயத்தில் சிக்கல் உண்டாக்கி கடவுளை நாடுகிறோம். 

இங்கு எண்ணங்கள் தான் தேவதைகள்... அச்சம் கொண்ட கற்பனைகள் தான் துர்தேவதைகள்.. நமது எண்ணங்கள் களங்கம் அல்லாமல் நேர்மையாக
இருக்கும் போது தேவதைகள் நமக்கு உதவி செய்யும். இங்கு பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையே இல்லை. அனைவரின் வாழ்க்கையிலும் இமயமலை போல் பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் எண்ணங்களில் ஏதுமில்லை என்றால் நம்மை சுற்றியுள்ள தேவதைகளின் வழிகாட்டுதலில் நன்றாகவே செயல்பட முடியும்.

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. ஏன் தெரியுமா?

ஒருவேளை இதுபோன்ற பிரச்சைனைகளை சந்திக்கும் போது, நம்பிக்கையுடன் இல்லாமல் அச்சம் கலந்த மனநிலையுடன் சிந்திக்க நேர்ந்தால், துர்தேவதைகளின் சக்தி ஓங்கும். இதனால் சாலையோரம் இருக்கும் சிறு பள்ளம் கூட பெரிய ஆபத்தை விளைவிக்கும். இதனால் தான் நமது ஆழ்மனத்தில் தோன்றும் எண்ணங்களும் வார்த்தைகளும் நல்லனவற்றை மட்டுமே பேசவும் நினைக்கவும் பழக்க வேண்டும்.

பொதுவாக நாம் எங்காவது சென்றாலோ, அல்லது உறவினர்கள் வீட்டிற்கு சென்றாலோ, அவர்கள் நம் வீட்டிற்கு வந்தாலோ.. முதலில் எப்படியிருக்கீர்கள் எண்டது கேட்பது வழக்கம். அப்படி கேட்கும் போது நமக்கு அளவற்ற பிரச்சனைகள் இருப்பினும் அதனை காட்டிக் கொள்ளாமல் நன்றாக உள்ளேன் என்ற பதிலே சொல்ல வேண்டும். அப்போது தான் நம்மை சுற்றியிருக்கும் தேவதைகள் அப்படியே ஆகட்டும் என்ற வரத்தை அருளும். ஒருவேளை நமது பிரச்சனைகள் குறித்து புலம்பினாலோ.. இது என்ன வாழ்க்கை என்று சலித்துக் கொண்டாலோ தேவதைகள் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிடும்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே!! புத்தரே புகழ்ந்த பூர்ணாவின் கதை!!

நமது முன்னோர்கள் நல்ல நாட்களிலும், மாலை விளக்கு வைக்கும் நேரங்களிலும் மகாலஷ்மியை மனதில் நினைத்து கவலைகளை ஒதுக்கி வைப்பர். அப்போது இல்லை என்ற வார்த்தைகளை மறந்தும்கூட உச்சரிக்க மாட்டார்கள். இன்னும் வியாபாரிகள் கூட தங்கள் கடைகளில் இல்லாத பொருளை வாடிக்கையாளர் கேட்டால் அதற்கு பதிலாக இவை இருக்கிறது என்று தான் சொல்வார்கள். வியாபாரத்தில் இல்லை என்று சொன்னால் அந்தப் பொருள்மட்டுமல்ல வியாபாரமும் இல்லை என்னும் அளவுக்கு மோசமான சூழ்நிலையை உண்டாக்கிவிடுமாம்.

அதனால்தான் நல்லனவற்றை சிந்திக்கவும், பேசவும் வேண்டும் என்று முன்னோர்கள் கூறினார்கள். நல்ல சொற்கள் கனி போன்று இருக்கும் போது.. கசப்பான விஷக்கனிகள் போன்று தீயவற்றை ஏன் பயன்படுத்த வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios