Asianet News TamilAsianet News Tamil

நடப்பதெல்லாம் நன்மைக்கே!! புத்தரே புகழ்ந்த பூர்ணாவின் கதை!!

ஐந்தறிவு உயிர்களிடம் இல்லாத சிறப்புக்கள் எல்லாம் ஆறறிவு உடைய மனிதர்களிடம் இருப்பதால் தான் மனித பிறவி சிறந்தது. அப்படிப்பட்ட மனிதன் பிறவா நிலையை அடைய இறைவனை வழிபாட்டு வருகிறான். ஆனால் வெறுமனே இறைவனை வணங்குவது என்பது ஆகாது. வழிபடுவதற்கு ஏற்ற மனம் பக்குவம் அடைந்திட வேண்டும் என்று ஆச்சார்ய பெருமக்கள் தெரிவிக்கிறார்கள்.
 

The story of Poorna praised by Buddha!
Author
First Published Oct 11, 2022, 3:55 PM IST

உதாரணத்திற்கு ஒரு ஓட்டுநர் தனது பொறுமையை இழந்து விட்டால்,  அந்த பேருந்தில் பயணித்த ஒட்டுமொத்த பயணிகளின் நிலைமை என்னவாகும். அதேபோன்று ஒரு குடும்பத்தில் குடும்ப தலைவியோ, தலைவனோ தனது பொறுமையை இழந்து விட்டால் அந்த குடும்பத்தின் நிலைமை என்னவாகும். அதோடு ஒரு நிர்வாகத்தின் தலைமை பொறுமை இழந்து விட்டால் அந்த நிர்வாகத்தின் நிலைமை என்னவாகும். அப்படி தான் வாழ்க்கையும்.. இந்த வாழ்க்கையின் மகிழ்ச்சி கதவை திறக்கும் சாவி பொறுமையும், பக்குவமும் தான்.. அது தான் நமது வாழ்க்கையை எளிமையாக்குவதோடு, இறுதியில் நம்மை சாதிக்கவும் வைக்கும். அப்படி சாதித்த ஒரு நபர் தான் பூர்ணா.

புத்தருக்கு பல சீடர்கள் இருந்தனர். அதில் முக்கியமானவர் தான் பூர்ணா. புத்தரின் சீடர்களில் பலர் தர்ம பிரச்சாரம் மேற்கொண்ட தருணம் அது. அப்படி தான் பூர்ணாவும் தர்ம பிரச்சாரம் மேற்கொள்ள புத்தரிடம் அனுமதி கேட்டார். அப்போது புத்தருக்கும், பூர்ணாவிற்கும் இடையில் மிகப்பெரும் உரையாடல் நடந்தது. 

புத்தர் முதலில் “பூர்ணா, எங்கே போய் தர்மப் பிரசாரம் செய்யப் போகிறாய்? என்று கேட்டார். உடனே பூர்ணாவும், குருவே, சூனப்ராந்தம் என்ற இடத்தில் தான் எனது பிரச்சாரத்தை மேற்கொள்ள போகிறேன் என பதில் கூற புத்தருக்கு ஒரே ஆச்சரியம். அந்த இடத்திலா..? அங்குள்ளவர்கள் அனைவரும் கல்வியறிவு இல்லாதவர்களாயிற்றே; உன் அறிவுரைகளை ஏற்காமல் உன்னை இகழ்ந்து பேசினால் என்ன செய்வாய்? என்று புத்தர் கேட்டார்.  அப்போது பூர்ணா அதனால் என்ன? கையால் அடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்ச்சியுடன் பிரசாரம் செய்வேன் என்றார்.

சரி, ஒருவேளை கைகளால் குத்து விட்டால்? என்ன செய்வாய் என கேட்க. 

அதனால் என்ன, ஆயுதங்களைக் கொண்டு தாக்கவில்லையே என்று எண்ணி மகிழ்ந்து என் தர்மப் பிரசாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.

விரல்ல செம்பு மோதிரம் போட்டால் எதிர்மறை சக்தி ஓடிடுமா.. அறிவியல் சொல்வது என்ன?

சரி, ஆயுதங்களைக் கொண்டு தாக்கினால் என்ன செய்வாய் ? என்று கேட்க..

அதனால் என்ன, ஆளைக் கொல்லவில்லையே, அந்த அளவுக்கு நல்லவர்கள் தான் என்றெண்ணி என் பணியைத் தொடருவேன். எனது கடன் பணி செய்து கொண்டு இருப்பதே! என்று தெரிவித்தார்.

சரி, உன்னைக் கொன்று போட்டுவிட்டால்……? என்றார்.

தடைப்பட்ட திருமணம் கைகூட திருமணக்கோல வெங்கடாஜலபதியை தரிசியுங்கள்!

மிக்க மகிழ்ச்சியுடன் இறந்து விடுவேன்; அட இவ்வளவு சீக்கிரம் முக்தி  நிலையை அடைய உதவினார்களே! என்று உள்ளம் மகிழ்வேன் என்று பூர்ணா பதிலளித்தார்.

உடனே புத்தர், “பூர்ணா, உன் விருப்பப்படியே செய்; நீ பரிபூரண பக்குவம் பெற்று விட்டாய்” என்று சொல்லி பொறுமையின் சின்னமான பூர்ணாவுக்கு ஆசி வழங்கினார்.

மேலும் உன்னைக் கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மனிதப்பிறவியானது சிறப்பு வாய்ந்தது. ஒரு மனிதன் மனிதனாக ஆகும் தகுதியை முதலில் பெற வேண்டும். அதற்கு முதலில் பக்குவமான மனதை பெற முயற்சிக்க வேண்டும். "நடப்பதெல்லாம் நன்மைக்கே" என்ற மனோபாவத்தை கொண்டிருக்க வேண்டும். எது நடப்பினும் மனதை அமைதியாகவும், பொறுமையாகவும் வைத்துக்கொள்ளும் பக்குவத்தை அடைந்து விட்டால் இறைவன் அருள் தேடி வரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios