Asianet News TamilAsianet News Tamil

Sarabesvara : தலையெழுத்தை மாற்றக்கூடிய சரபேஸ்வர வழிபாடு!

தலையெழுத்தை யாராவது மாற்ற முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். இறைவனாலும் முடியாதே என்று சொல்ல கூடியவர்கள். உங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டிய நேரம் இது.

Sarabesvara worship that can change the title!
Author
First Published Oct 11, 2022, 5:11 PM IST

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய இக்கட்டான சூழ்நிலைகளில், 'எல்லாம் என் தலையெழுத்து'.. என்று வருத்தப்பட்டோ அல்லது கோபப்பட்டோ சொல்வதுண்டு. ஆனால் அவர்களுக்கு சந்தோஷம் வரும் நேரத்தில் ஒருமுறை கூட ஒருவர் கூட, இத்தகைய நற்பலனை பெறுவதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று கேள்வி எழுப்புவதில்லை.  பொதுவாக மக்கள் இதுபோன்ற துயரங்கள் தாக்கும் சமயத்தில் தமது தலையெழுத்துக்கு கடவுளையும் மற்ற ஜீவராசிகளையும் குற்றம் கூறுவார்களே தவிர நமது கடந்த காலச் செயல்கள் தான் இதற்கு முக்கிய காரணம் என்பதை புரிந்து உணர்வது அரிதாக தான் உள்ளது. 

ஒருவரின் தலையெழுத்து என்பது, அவனின் ஆசைகள், அவனது கடந்த காலச் செயல்கள், இயற்கையின் செயல்பாடு, கர்ம வினைக்கான காலம் போன்றவை மட்டுமின்றி வேறு சில காரணங்களுடன் கூடி பின்னிப் பினையப்பட்ட ஒரு சிக்கலான முடிச்சு என்றே கூறவேண்டும். இந்தக் காரணங்களின் விளைவுகளைக் கூட்டிக் கழித்த பிறகே அவரவர் அனுபவிக்க வேண்டிய ஒட்டு மொத்த பலன்களே தலையெழுத்து என அறியப்படுகிறது. இந்த தலையெழுத்தை யாராவது மாற்ற முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். இறைவனாலும் முடியாதே என்று சொல்ல கூடியவர்கள். உங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டிய நேரம் இது.

தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணத்திற்கு அருகே திருபுவனம் என்கிற கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கம்பகரேஸ்வரர் என்று அழைக்கப்படும் சபரேஸ்வரர் கோவில். இந்த சபரேஸ்வரர் தான் உங்கள் தலையெழுத்தை ஒட்டுமொத்தமாக மாற்றி உங்களுடைய சிக்கலில் இருந்து விடுவித்து அருள் புரிகிறார். இங்கு பிரசித்தி பெற்ற பல கோவில்கள் இருக்க பக்தர்களின் அதிக நம்பிக்கையை கொண்ட கோயிலாக உள்ளது சரபேஸ்வரர் கோவில் தான்.

மனிதன் இந்த கலியுகத்தில் தனக்கு ஏற்படும் துன்பங்களை எல்லாம் போக்கிக் கொள்ளவும், தனக்கு நேரும் அனைத்து ஆபத்துகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் சரணடைய வேண்டிய தெய்வம் சரபேஸ்வரரே. இந்த சபரேஸ்வர் உருவான காரணமும் உண்டு. நாராயணன் இரண்யகசிபுவை வதம் செய்வதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்து வதம் செய்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காது திமிரிக் கொண்டிருந்த நரசிம்மனின் உக்கிரத்தை தணிப்பதற்காக அவரை விட உக்கிரமாக வெளிப்பட்ட சிவபெருமானின் வடிவமே சரபேஸ்வர வடிவம் ஆகும்.

சபரேஸ்வரரின் உருவமானது மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை.  அதிலும் தங்க நிற பறவையின் உடலும், இறக்கை இரண்டும் மேல் தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழ் நோக்கியும், 4 கால்கள் மேல் நோக்கிய யபடியும், வால் மேல் தூக்கியபடியும், தெய்வத் தன்மை கொண்ட மனிதத் தலையும் சிங்கமுகமும் கொண்டு விசித்திரமாக அருள்பாலிக்கிறார். ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி தேவி ஆகியோர் இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள். சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து பிரத்யங்கிரா தேவி தோன்றி நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் சரபேஸ்வரரின் சக்தியை பற்றி  லிங்க புராண குறிப்புகளும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி இவர் நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி என்றும்
அழைக்கப்படுகிறார்.

சரணாகதியின் மகத்துவம் தெரியுமா?

அக்னி தெய்வமாகவும் சரபேஸ்வரரை  வணங்குகிறோம். நம்மை பாதுகாக்க நம் கண்களுக்கு  புலப்படாத எதிரிகளை அழித்து அபயமளிப்பவர். இவரை வேண்டி வணங்கினால் அனைத்து துன்பங்களிலிருந்தும் தப்பித்து விடலாம். இவரை வழிபட்டால் பில்லி, ஏவல், சூனியம் போன்ற தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபடலாம். தீரா நோயால் பாதிப்புக்குள்ளானாலும் அதிலிருந்தும்  விடுபடலாம். இவரை ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரத்தில் வழிபடுவது சிறப்பு. இந்த காலத்தில் நமது கண்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் என்று ஏராளமானது இருக்கிறது. அவற்றை அழிக்க இவரை வழிபடலாம். 

Sarabeswarar Pooja : விதியையும் மாற்றுவார் சரபேஸ்வரர்! வழிபாடும் முறை இதுதான்!

எந்த செயல் செய்தாலும் வெற்றி கிடைக்க வேண்டுமென்றாலும், உடல்நிலை சரி செய்யவும் இவரை வழிபடலாம். அதோடு தரித்தரங்கள் நீங்கவும் இவரை வழிபடலாம். இவரின் சக்திகளான பிரத்யங்கிரா தேவியை வணங்கினால் நமக்கு வரவிருக்கும் ஆபத்து நீங்கும், இன்னொரு சக்தியான சூலினி துர்க்கையின் அம்சத்தை பெற்றிருப்பதால் அனைவரின் நலம் காப்பாள் என்பதால் நாம் செய்யும் காரியங்கள் தடை பட்டால் இவளை வழிபடலாம். இப்படி நமது தலை விதியை மாற்றும் வல்லமை படைத்த சரபேஸ்வரரை வழிபட்டு வளமாய் வாழுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios