தை அமாவாசை 2024 : இவற்றை தானம் செய்யுங்கள்.. ஜென்ம பாவம் தீரும்..முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்!
முன்னோர்களின் ஆசிகள் கிடைக்க இந்த பொருட்களை தை அமாவாசையில் தானமாக கொடுங்கள்.
இந்து மத சாஸ்திரங்களின்படி வருடம் முழுவதும் வரும் அம்மாவாசை சிறப்பானது என்றாலும் தை அமாவாசை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய நாளாக கருதப்படுவதால், அந்நாளில் அவர்களுக்கு தர்ப்பணம் குறித்து அவர்களை வழிபட வேண்டும்.
அதன்படி இந்தாண்டு தை அமாவாசை பிப்ரவரி 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. எனவே, இந்த தை அமாவாசை நாளான பிப்ரவரி 9ஆம் தேதி காலை 08. 05 மணி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி அன்று அதிகாலை 04. 28 மணிக்குள் உங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்.
அமாவாசை நாளில் பக்தர்கள் புனித நதிகள் மற்றும் ஏரிகளில் மூழ்குவார்கள். அதன் பிறகு வழிபாடு, தவம், தானம் முதலியவை செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி இந்நாளில் தர்ப்பணம், திதி வழங்குவது மூலம் முன்னோர்கள் முக்தி அடைகின்றன. அமாவாசை நாளில் தானம் செய்வது சிறப்பு வாய்ந்தது. அமாவாசை தினத்தன்று தானம் செய்வதால் ஒவ்வொருவருக்கு நிச்சயம் வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதில் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பையும் தருகிறது. எனவே இந்த பொருட்களை தை அமாவாசையில் தானம் செய்ய வேண்டும். அவை..
இதையும் படிங்க: தை அமாவாசை 2024 : தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்..? தப்பி தவறி கூட இந்த விஷயங்களை செய்யாதீங்க...
2024 தை அமாவாசை அன்று இவற்றை தானம் செய்யுங்கள்:
- ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஒரு பசு தானம் ஒரு சிறந்த தானமாக கருதப்படுகிறது. நீங்கள் பொருளாதார ரீதியாக வலுவாக இருந்தால் அமாவாசை நாளில் பசுவை ஒருவருக்கு தானம் செய்யுங்கள். இதன் மூலம் ஒருவன் 100 யாகங்களுக்கு சமமானதை அடைகிறான்.
- உணவு தானம் செய்வதற்கும் வேதங்களில் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனவே தை அமாவாசை அன்றி ஏழு எளிய ஒதுக்கு அன்னதானம் செய்யலாம்.
- அமாவாசை நாளில் உணவு, தண்ணீர், ஆடை, எள், நவதானியங்கள், உப்பு, புத்தகம், வெள்ளி, தங்கம், பழங்கள், காய்கறிகள், வெல்லம் முதலியனவற்றை தானமாக வழங்கலாம்.
- அதுபோல் தை மாதத்தில் கடும் குளிரின் காரணமாக ஏழைகளுக்கு போர்வைகளை தானமாக வழங்கலாம்.
- தை அமாவாசை அன்று முன்னோர்களை மகிழ்விக்க பிராமணர்களுக்கு உணவு வழங்கல் அவ்வாறு செய்வதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருவார்கள்.
இதையும் படிங்க: தை அமாவாசை 2024 எப்போது..? தேதி, நேரம் மற்றும் தர்பணத்தின் பலன்கள்..
- தை அமாவாசை நாளில் தீபம் மற்றும் விளக்கு தானமாக கொடுக்கலாம். இதனால் உங்களுக்கு பார்வை கோளாறு அல்லது கண்ணில் பிரச்சனைகள் இருந்தால் அவை அனைத்தும் நீங்கும்.
- தை அமாவாசை அன்று அரிசி தானம் செய்யலாம் இதனால் உங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கும். இந்த தானம் செய்யும் போது பிரார்த்தனை செய்து கொடுங்கள்.
- அதுபோல தை அமாவாசை தினத்தில் யாருக்காவது தேன் வழங்கலாம். இதனால் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் பிள்ளை செல்வம் இல்லை என்ற குறை நீங்கும்.
- சாஸ்திரம் படி, ஒருவருக்கு தேங்காயை தானமாக கொடுத்தால் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம் உண்டு.
- ஒருவேளை இவை எதுவுமே உங்களால் செய்ய முடியவில்லை என்றால், ஒரு பார்சல் தயிர் சாதமாவது வாங்கி கொடுங்கள். இதனால் பித்துக்களின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D