Asianet News TamilAsianet News Tamil

பழனி முருகன் கோவிலில் கருவரைக்குள் நுழைந்த மர்ம நபர்கள்; வாக்குவாத்தில் பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் மூலவர் சிலை அமைந்துள்ள கருவறைக்குள் சிலர் சென்ற விவகாரம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலவர் சன்னதிக்குள் நுழைந்ததை அடுத்து, கருவறை முன்பு பக்தர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைராலகியுள்ளது.

some people entered palani murugan temple karuvarai before a kumbabishekam
Author
First Published Jan 30, 2023, 3:21 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது.  கும்பாபிஷேகம் நடப்பதற்கு முந்தைய நாளான ஜனவரி 26 ஆம் தேதி மாலை மூலவர் சிலை அமைந்துள்ள கருவறைக்குள் சிலர் சென்ற சம்பவம் பக்தர்களிடையே பெரும்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஜி20 மாநாடு புதுவையில் பிச்சைகாரர்களை துரத்தி துரத்தி பிடிக்கும் அதிகாரிகள்

இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழனிமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் குறித்த தேதி அறிவிக்கப்பட்டவுடன், பழனி கோவிலில் அமைந்துள்ள நவபாஷாண சிலையை பாதுகாக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதியரசர் பொங்கிலியப்பன் தலைமையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவை சிரவை ஆதினம், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், இந்து சமய அறநிலையத்துறை  ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, பழனி கோவில் குருக்கள் கும்பேஸ்வரர், திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, பழனி எம்எல்ஏ ஐபி.செந்தில்குமார், பழனி நகர்மன்றத் தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 15 பேர் கொண்ட  குழு ஒன்று அமைக்கப்பட்டது. 

தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம்; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

இந்நிலையில் கும்பாபிஷேகம் நடப்பதற்கு முதல் நாலா அதாவது கடந்த 26ம்தேதி வியாழக்கிழமை இரவு, சிலை பாதுகாப்பு கமிட்டியைச் சேராத சிலர் கோவில் கருவறைக்குள்‌ சென்று வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பக்தர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் பழனி கோவில் கருவறைக்குள் நுழையும் வாசற்படியில் அமைச்சர் சேகர்பாபு சட்டை அணியாமல் நிற்பதும், உள்ளே குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட சிலர் நிற்பதும் தெரிகிறது‌. தொடர்ந்து மற்றொரு வீடியோவில் திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி மற்றும் சிலர் வெளியே வருவதும் தெரிகிறது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios