Asianet News TamilAsianet News Tamil

உங்க வீட்டில் குலதெய்வம் இருக்கா.. இல்லையா..?? கண்டுபிடிக்க ஈசியான அறிகுறிகள்!

உங்கள் வீட்டில் குலதெய்வங்களின் நடமாட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்..

signs of kuladeivam in home in tamil mks
Author
First Published Mar 13, 2024, 10:36 AM IST

பொதுவாகவே, இந்து மதத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுள் உண்டு. சிவன், விஷ்ணு, லட்சுமி, பிரம்மா, அனுமான் என பல கடவுள்கள் இருந்தாலும், அவர்களுக்கென விருப்பமான கடவுள் என ஒன்று உண்டு. அந்தவகையில், 
நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு உதவக்கூடிய தெய்வங்களில் ஒன்றுதான் குல தெய்வங்கள்.  உண்மையைச் சொல்ல போனால் உங்கள் குலத்தைக் காக்கிறதும் குல தெய்வங்கள் தான்.

இப்படிப்பட்ட குலதெய்வங்கள் நம் வீட்டில் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை நாம் சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக,  உங்கள் வீட்டில் வறுமை, பண கஷ்டம் போன்ற பிரச்சினைகள் இருந்தால், உங்கள் வீட்டில் குலதெய்வம் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இதற்கு, வருடத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று கண்டிப்பாக வழிபடுங்கள். எனவே, இப்போது உங்கள் வீட்டில் குலதெய்வம்  இருக்கிறதா.. இல்லையா என்பதை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்...

தீபம்: நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் பூஜை செய்து விளக்கேற்றும் போது அந்த விளக்கு எப்போதும் போல் இல்லாமல், கொழுந்து விட்டு எரிவதும், அதுவும் அது வெள்ளை அல்லது வயலட் நிறத்தில் எரிகிறது என்றால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறது என்று அர்த்தம்.

பல்லி சத்தம்: உங்கள் வீட்டு பூஜை அறையில் பல்லி நடமாட்டம் இருக்கிறது என்றால், அந்த இடத்தில் தெய்வ சக்தி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். அதுபோல், உங்கள் வீட்டில் பல்லி சத்தமிட்டு கொண்டே இருக்கிறது என்றால், உங்கள் குலதெய்வத்தின் நடமாட்டம் உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம்.

வீட்டில் திடீர் நறுமணம்: உங்கள் 
வீட்டில் திடீர் என்று சந்தனத்தின் வாசனை, பூவின் வாசனை, விபூதியி நறுமணம் வந்தால் உங்கள் வீட்டில் குல தெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம். 

எலுமிச்சை: நீங்கள் கோவிலுக்கு சென்று வரும்போது அங்கு கொடுக்கப்படும் எலுமிச்சைப் பழத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டின் 
பூஜை அறையில் வையுங்கள். நாட்கள் செல்ல செல்ல எலுமிச்சை பழம் 
சுருங்கி காய்ந்து போனால்  உங்கள் வீட்டில் குலதெய்வத்தின் நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம். ஆனால், அதே எலுமிச்சம் பழம் அழுகி இருந்தால் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி துளியும் இல்லை என்று அர்த்தம். அதுமட்டுமின்றி, துர்சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதை அது உணர்த்துகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios