Asianet News TamilAsianet News Tamil

Saptha Kanni Vazhipadu : தீராத பிரச்சனைகளையும் தீர்க்கும் சப்த கன்னி வழிபாடு..

சப்த கன்னிகளை நாம் வழிபடும் போது நோய்நொடி இல்லாத சிறந்த ஆரோக்கியமான வாழ்வை பெறலாம் என்பது நம்பிக்கை

Saptha Kanni worship for all problems in your life tamil Rya
Author
First Published Apr 8, 2024, 1:40 PM IST

சப்த கன்னிகளை நாம் வழிபடும் போது நோய்நொடி இல்லாத சிறந்த ஆரோக்கியமான வாழ்வை பெறலாம் என்பது நம்பிக்கை. பழமையான சிவாலயங்களில் கர்ப்பகிரகத்தை ஒட்டி முதல் பிரகாரத்தின் உள்ள தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு முன்பாக சப்த கன்னியர்களை நாம் காணமுடியும். 

யார் இந்த சப்த கன்னிகள்?

அண்ட, முண்டர்கள் என்ற அரக்கரைகளை அழிப்பதற்காக அவதரித்தவர்கள் தான் இந்த சப்த கன்னிகள். மனித கர்ப்பத்தில் அல்லது ஆண், பெண் இணைவில் பிறக்காமல், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்தில் இருந்து உருவானவர்கள் தான் இந்த சப்த கன்னிகள். பிராமி, மகேஸ்வரி, வராகி, வைஷ்ணவி, இந்திராணி, கவுமாரி, சாமுண்டி ஆகியோர் தான் சப்த கன்னிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பிராமி :

நான்முகனான பிரம்மன் அம்சமாக தோன்றியவர் தான் பிராமி. அரசுப் பணிகளுக்காக முயற்சி செய்பவர்கள் தினமும் காயத்திரி மந்திரத்தை கூறி வருவதன் மூலம் கண்டிப்பாக அவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். காயத்திரி மந்திரத்தை படிக்கும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

மகேஸ்வரி :

மகேசனின் சக்தி உடையவர், இவரை வழிபடுவதனால் கோபங்கள் நீங்கி அமைதியான வாழ்வு கிடைக்கும். அம்பிகையின் இன்னொரு அம்சமகாக போற்றப்படுகிறார்.

வராகி :

சிவன், சக்தி, ஹரி என மூன்று அம்சங்களை பெற்றவர். வராகி அம்மனை மனமுருகி வழிபட்டால், வாழ்வில் சிக்கல்கள் தடைகள் தீராத பகைகள் விலகிவிடும். 

வைஷ்ணவி :

விஷ்ணுவின் அம்சமான விளங்குபவர் வைஷ்ணவி. வளமான வாழ்க்கை சகல பாக்கியங்கள் செல்வம் என அனைத்தையும் வைஷ்ணவி தேவியை வணங்குவதால் கிடைக்கும். திருமணம் ஆகாத ஆண்கள் வழிபட்டால் வாழ்க்கை துணையாக சிறந்த மனைவியாக கிடைப்பாள். 

இந்திராணி:

இந்திரனின் அம்சமாக விளங்குபவர் இந்திராணி. கல்யாணம் ஆகாத பெண்கள் இந்திராணியை மூலம் மிகச் சிறந்த கணவனைப் பெறமுடியும்.

 கவுமாரி :

முருகனின் அம்சமே கவு மாரி எனப்படுகின்றது இவரை வழிபடுவதன் மூலம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் அதே போல் முருகனின் அழகோடு இவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும்.

சாமுண்டி:

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்ரகாளி தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக காட்சி தருகிறார். இந்த சாமுண்டி தேவியானவள் சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் சாமுண்டி தேவியை வழிபடுவது மூலம் எதிரிகளின் தொல்லை நீங்கி நமக்கு தேவையான செல்வம் சுகங்கள் நமக்கு கிடைக்கும். இவர்களே சப்த கன்னிகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios