ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு..!
ஈஷா யோகா மையத்தில் புகழ்பெற்ற ஆதியோகி முன்பு நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.
மகா சிவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மிகச்சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில், பிப்ரவரி 18ம் தேதி மகா சிவராத்திரியை ஒட்டி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பாரம்பரிய, கலாச்சார, பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படவுள்ளது.
ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்கிறார். இந்தியாவின் முதல் பழங்குடி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. அவர் குடியரசு தலைவராக பதவியேற்ற பின், முதல் முறையாக இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
Isha Mahashivratri 2023: மஹாசிவராத்திரி – ஈசனுடன் ஓர் இரவு! முழுமையான விவரம்
ஈஷா யோகா மையத்தில் புகழ்பெற்ற ஆதியோகி சிலை முன்பு மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி விழா நிகழ்வுகள், தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, மராத்தி உட்பட பல்வேறு மொழிகளில் இந்தியாவின் முன்னணி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பப்படும். மேலும் ஆன்லைனிலும் இந்த நிகழ்வுகளை நேரலையாக பார்க்கலாம்.
ஈஷா மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள ஆன்லைனில் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 112 அடி உயர ஆதியோகி முன்பு பல்வேறு நிகழ்வுகள் நடக்கவுள்ளன.
மகா சிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ள சத்குரு, மகா சிவராத்திரி மதம் அல்லது நம்பிக்கை தொடர்பான விஷயம் அல்ல. இனம் - நாடு சம்மந்தப்பட்ட விஷயமும் அல்ல. அந்த குறிப்பிட்ட இரவில் பிரபஞ்சத்தின் சக்தி மனித ஆற்றலை மேம்படுத்தும் என்றார்.
ஈஷா மஹா சிவராத்திரியில் இலவசமாக பங்கேற்கலாம்..! ஆன்லைன் முன்பதிவு அவசியம்
இவ்விழா தியானலிங்கத்தில் நடைபெறும் பஞ்ச பூத க்ரியையுடன் தொடங்கும். அதைத்தொடர்ந்து லிங்க பைரவி தேவி மஹா யாத்திரை நடைபெறும். பின்னர், விழா மேடையில் குடியரசு தலைவர் மற்றும் சத்குரு அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.