பழனி முருகன் கோவிலில் தமிழ் மறைகள் முழங்க யாக பூஜைகள் தொடக்கம்

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாக பூஜைகள் இன்று துவங்கியது. 

palani murugan temple kumbabishekam functions started

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. போகர் சித்தரால் வடிவமைக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலைக்கு மருந்து சாத்தும் பணி இன்று நடைபெற்றது. இன்று முதல் வருகின்ற 27ம்தேதி கும்பாபிஷேகம் முடிவடையும் வரை மூலவரை தரிசிக்க முடியாது. எட்டு கால யாக பூஜைகளுடன் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் முதல்கால யாகபூஜை மலைக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் துவங்கியது‌‌. 

நடத்தையில் சந்தேகம்; நடுரோட்டில் மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்

மலைக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு, தெய்வ விக்ரகங்களின் சக்தியை, புனிதநீர் அடங்கிய புனித கலசங்களில் உருஏற்றி யாகசாலைகளில் வைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. வேதமந்திரங்களும், தமிழ் மறைகளும் ஓத யாகங்கள் நடத்தப்படுகிறது. 

தொடர்ந்து வரும் 27ம் தேதி அதிகாலை வரை எட்டு கால வேள்வி பூஜைகள் துவங்கி நிறைவுறுகிறது. 26ம் தேதி மலைக்கோவில் மூலவர் ராஜகோபுரம் தங்க விமானம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள திருக்கோவிலுக்கு 26ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையடுத்து 27ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்தம் அபிசேகம் நடத்தப்பட்டு, மூலவருக்கு  கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. 

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்த குழந்தைக்கு எலும்பு முறிவு: உறவினர்கள் குற்றச்சாட்டு

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தங்கரதம் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது‌. கும்பாபிஷேகத்தன்று காலை 9:30 மணி வரை குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் மலைக்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பு கருதி அதிகளவில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios