பழனியில் 23 முதல் 27ம் தேதி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து - கோவில் நிர்வாகம்

பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் வருகின்ற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், வருகின்ற 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை மூலவரை பக்தர்கள் தரிசிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

palani murugan temple dharisanam will be canceled on coming 23 to 27 says temple management board

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இதையடுத்து பல்வேறு முன் ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. அந்த வகையில் பழனி கோவில் கும்பாபிஷேகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

திண்டுக்கல்லில் வளர்ப்பு நாயை நாய் என்று அழைத்த முதியவர் குத்தி கொலை

அருள்மிகு பழனி ஆண்டவர் பெண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார். ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை ஐஜி அஸ்ராகர்க், மாவட்ட ஆட்சியர் விசாகன், டிஐஜி அபினவ் குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்தும் பணி நடைபெற இருப்பதால் வருகிற 23ம் தேதி முதல் 27ம்தேதி வரை நவபாஷாண மூலவர் சிலையை தரிசனம் செய்யமுடியாது. எனவே பாதயாத்திரை வரும்‌ பக்தர்கள் நவபாஷாண சிலையை தரிசனம் செய்யவேண்டும் என்றால் குறிப்பிட்ட நாட்களில் பழனி கோவிலுக்கு வருவதை தவிர்த்து கும்பாபிஷேகம் முடிந்தபிறகு கோவிலுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கிய திமுக எம்எல்ஏ.க்கள்

அதேபோல  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி-தாராபுரம் சாலையில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பக்தர்கள் பழனி நகருக்குள் வருவதற்கு கட்டணமில்லா சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் கும்பாபிஷேகத்தின் போது மலை கோவிலுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

இதில் 58வயதிற்கு மேலானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விவிஐபி பாஸ் உள்ளவர்கள் என ஆயிரம் பேர் மட்டுமே ரோப்கார் மற்றும் மின்இழுவை ரயில் மூலம் அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் அனைவரும் படிப்பாதை வழியாக மட்டுமே செல்லவேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் மலைக்கோவில் பிராகரத்தை 39 இடங்களாக பிரித்துள்ளதாகவும், அங்கிருந்து சாமிதரிசனம் செய்யும் வழி, பாதுகாப்பாக வெளியேறுவது மற்றும் பழனி அடிவாரம் பகுதியில் மூன்று இடங்களில் 70ஆயிரம் பேர் வரை சாப்பிடும் வகையில் அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios