Asianet News TamilAsianet News Tamil

காசியில் மட்டும் கருடனையும், பல்லியையும் பார்க்கவே முடியாது.. ஏன் தெரியுமா? வியப்பூட்டும் தகவல்..

காசியில் கருடனையும், பல்லியையும் எங்குமே பார்க்க முடியாது என்பது பலருக்கும் தெரியாது. 

Only in Kasi you can never see garuda and lizard.. Do you know why? Amazing information.. Rya
Author
First Published Oct 6, 2023, 10:42 AM IST

ஏழு ஜெனங்களிலும் செய்த பாவங்களைப் போக்கும் புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது. காசியின் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். சிலர் நேரிலும் சென்று பார்த்திருப்பார்கள். மேலும் காசியில் பல ஆச்சர்யமூட்டும் விஷயங்களை பற்றி வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அந்த வகையில் காசியில் கருடனையும், பல்லியையும் எங்குமே பார்க்க முடியாது என்பது பலருக்கும் தெரியாது. 

ஆம். உண்மை தான்.. வாராணசியைச் சுற்றிப் பார்த்தீர்கள் என்றால், எங்கும் கருடன் சுற்றுவதைப் பார்க்கவே முடியாது. அதேபோல் காசியில் எங்குமே பல்லியை உங்களால் பார்க்கவே முடியாது. ஏன் தெரியுமா? நம்முடைய வீடுகளில் கூட சாதாரணமாக திரிகின்ற பல்லி மோட்ச ஸ்தலமான வாரணாசியில் மட்டும் ஏன் இல்லை என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.  இதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது. ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்த பின், ஹனுமனிடம் ராமேஸ்வரத்தில் ஒரு சுயம்பு லிங்கத் நிறுவ வேண்டும். அதற்காக காசியில் இருந்து ஒரு சுயம்பு லிங்கத்தைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அப்போது காசியை நோக்கி ஹனுமன் பயணம் மேற்கொண்ட போது,  பல ஆயிரக்கணக்கான லிங்கங்கள் ஹனுமனின் கண்களில் தென்படுகின்றன. இதனால் குழம்பிப் போகும் ஹனுமனுக்கு எது சுயம்பு லிங்கம் என்று தெரியவில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எனினும் சுயம்பு லிங்கத்தைக் கொண்டு சென்றால் அதற்குரிய பலனும், சக்தியும் மிக மிக அதிகம் என்பதால், சுயம்பு லிங்கத்தை தேடி காசி முழுவதும் ஹனுமன் தேடி அலைந்து கொண்டிருந்தார். ஆனால் அவரால் சுயம்பு லிங்கத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அங்கு கருடன் ஹனுமனுக்கு உதவி செய்ய முன் வருகிறார். இதுதான் நீங்கள் தேடும் சுயம்பு லிங்கம் என்று ஹனுமனுக்குப் புரிய வைக்க, ஒரு சுயம்பு லிங்கத்துக்கும் மேலாக மேல்நோக்கி, வட்டமடித்து கத்திக் கொண்டே கருடன் வலம் வந்து கொண்டிருந்தது.  அதை ஹனுமன் கண்டுபிடித்துவிட்டார்.

அதே போல பல்லியும் அந்த சுயம்பு லிங்கம் இருக்கின்ற திசையைப் பார்த்து, கத்தி ஹனுமனுக்கு உதவி செய்தது. இவ்வாறு ஹனுமன் சுயம்பு லிங்கத்தை கண்டுபிடிக்க, கருடனும் பல்லியும் சுயம்பு லிங்கம் இருப்பதை ஹனுமன் கண்டுபிடிப்பதற்காக உதவி செய்தது. பின்னர் கருடன், பல்லி இருவருக்கும் நன்றி தெரிவித்த கருடன், அந்த சுயம்பு லிங்கத்தை எடுத்து கொண்டு புறப்பட தயாரானார்.

ஒரே ஒரு தேங்காய் போதும்.. நம் வேண்டுல் அனைத்துமே நிறைவேறும்.. எந்த தடையும் இருக்காது..

அப்போது அங்கு ஒரு சிக்கல் வெடித்து. அங்கு வந்த கால பைரவர், ஹனுமனை தடுத்து நிறுத்தினார். ஏனெனில் கால பைரவர் தான் காசியின் காவல் தெய்வம். அந்த கால பைரவரைத் தாண்டி, யாரும் காசியை விட்டு எதுவும் வெளியில் எடுத்துக் கொண்டு செல்ல முடியாது. ஆனால் ஹனுமனோ ஸ்ரீ ராமருடைய கட்டளைப்படி சுயம்பு லிங்கத்தை எப்படியாவது கொண்டு சென்று விட வேண்டும் என்று எடுத்து செல்ல வேண்டும் என்று கூறுகிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் வலுக்கிறது. இதைப் பார்த்த தேவலோகத்தினர் இப்படியே தொடர்ந்தால், இந்த மண்ணுலகில் பிரளயமே வெடிக்குமே என்று பயந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த சண்டை பெரிதாகாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கால பைரவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். சுயம்பு லிங்கத்தை எடுத்துச் செல்லவும் வழிவகுக்க வேண்டும் என்று கூறினார்.. 

ஹனுமானின் விசுவாசத்தைப் புரிந்து கொண்ட கால பைரவர், லிங்கத்தை எடுத்துச் செல்வதற்கான அனுமதி கொடுத்தார். தன்னுடைய அனுமதியின்றி எடுத்துச் சென்றதற்காக மட்டுமே தான் சண்டையிட்டதாக தெரிவித்த அவர், சுயலிங்கத்தை ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்வதற்காகவும் ஹனுமனை அனுப்பி வைத்தார். ஆனால் அதே நேரம் ஹனுமனுக்கு தன்னுடைய அனுமதியின்றி லிங்கத்தைக் காட்டிக் கொடுத்ததற்காக கருடனுக்கும் பல்லிக்கும் கால பைரவர் சாபமிட்டார். அதாவது இந்த காசியில் எங்கும் நீங்கள் இருவரும் இருக்கக்கூடாது என்று சாபம் கொடுத்தார். இதனால் தான் வாரணாசியில் கருடனும் பல்லியும் காணப்படுவதில்லை. இந்த இரண்டையும் காசியில் எங்குமே பார்க்க முடியாது.

Follow Us:
Download App:
  • android
  • ios