இந்த 1 தீபம் போதும்.. பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்!!
Nei Deepam Valipadu : எந்த தீபத்தை ஏற்றினால் உங்களது வாழ்க்கையில் பண வரவு அதிகரிக்கும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்து மதத்தில், ஒருவரது வாழ்க்கையில் பணம் சேருவதற்கும், செல்வத்தை வாரி வழங்குவதற்கும் என சில கிரகங்களும், கடவுள்களும் உள்ளது. இவை இரண்டையும் முறையாக வழிபட்டால், அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கென பெரிய வழிபாடுகள் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வழிபட்டால் போதும், சகல விதமான நன்மைகளையும் பெறுவீர்கள்.
குரு பகவான் :
அந்த வகையில், செல்வத்திற்கு அதிபதியாக இருப்பது சுக்கிரன் மற்றும் குரு பகவான் தான். இவை இரண்டில் சுக்கிர பகவான் நம்முடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு மட்டுமே நமக்கு பணத்தை நமக்கு வழங்குவார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், குரு பகவானோ அப்படியில்லை. அவர் நம்முடைய தேவைக்கும் அதிகமாக நமக்கு பணத்தை வாரி வழங்குவார்.
இப்படிப்பட்ட குரு பகவானை, அவருக்குரிய வியாழக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை நாளில் தீபம் ஏற்றுவது நல்லது தான். ஆனால், அதை எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும் என்ற கேள்வி உங்களது மனதில் எழலாம். அதற்கான பதில்.
இதையும் படிங்க: குழந்தைக்கு பொல்லாத கண் திருஷ்டி நீங்க.. இப்படி சுத்தி போடுங்க..!
நெய் தீபம் ஏற்ற உகந்த நேரம் :
வியாழக்கிழமை என்று குரு பகவானுக்கு காலை 6-7 அல்லது மதியம் 1-2க்குள் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இரவில் ஒருபோதும் ஏற்றக்கூடாது. சூரியன் உதயமாகி இருக்கும் சமயத்தில் ஏற்றினால் மட்டுமே நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதையும் படிங்க: நிலம் இருந்தும் வீடு கட்ட முடியவில்லையா..? உடனே இந்த 2 பரிகாரங்கள் செய்ங்க.. வீடு கட்டுவது உறுதி!
இந்த தீபத்தை எங்கே ஏற்ற வேண்டும்? :
பண வரவு அதிகரிக்க இந்த நீதிபத்தை நீங்கள் உங்களது வீட்டில் தான் ஏற்ற வேண்டும். இதற்கு நீங்கள் உங்களது பூஜை அறையில் வடக்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும். நெய்யானது சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நெய் தீபத்தை நீங்கள் வாரத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரம் மட்டும் ஏற்றினால் போதும், உங்களது வாழ்க்கையில் கண்டிப்பாக நல்ல மாற்றங்களை காண்பீர்கள். நீங்கள் நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு உங்களுக்கு பணம் பெருகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D