நவகிரக தோஷங்கள் நீக்கும் சூரியனார் கோயிலின் சிறப்பு பற்றி தெரியுமா..?  

தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடியில் இருக்கும் சூரியனார் கோயில் நவகிரக தோஷங்களில் நீக்குவதற்கான சிறந்த பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.

navagraha temples do you know about the specialty of suryanar temple in thanjavur district in tamil mks

சூரியனார் கோயில் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடியில் இருக்கும் சூரியனார் கோயில் தான். தமிழ்நாட்டில் இந்த கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. ஏனென்றால், நவகிரகங்களுக்கு என ஒரு தனிக்கோயில் இருகிறது என்றால், அது இந்த சூரியனார் கோயில்தான்.

இந்த கோவிலின் முக்கியத்துவம்:
இந்த கோவிலின் கருவறையில் சூரிய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இருக்கிறார். அவரது இடது புறத்தில் உஷா தேவியும், வலது புறத்தில் பிரதியுஷாதேவி என்னும் சாயதேவியுடனும் திருமண கோலத்தில் நின்றபடி காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, சூரிய பகவான் தனது இரு  கரங்களிலும் செந்தாமரை மலர்களே ஏந்தியபடி புன்மறுவலுனும் காட்சி தருகின்றார்.

பொதுவாகவே, சூரிய பகவான் உக்கிரமானவர் என்று அனைவரும் அறிந்ததே. அவரது வீச்சை யாராலும் தாங்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காக, அவரை சாந்தப்படுத்தும் விதமாக குரு பகவானை அவருக்கு எதிரில் வைத்துள்ளனர். இதனால்தான் சூரிய பகவானை எளிதில் வழிபட முடிகிறது. மேலும், சூரிய பகவானை நோக்கியபடியே அவரது வாகனமான குதிரை இருக்கிறது. அதாவது, சிவலிங்கத்திற்கு முன் நந்தி இருப்பது போல இங்கு குதிரை இருக்கிறது.

இதையும் படிங்க:  நெல்லையில் ஆற்றின் நடுவே  இருக்கும் முருகன் கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா.?

முக்கியமாக, நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கக்கூடியதும் மற்றும்  நவக்கிரகமே மூலஸ்தனமாக அமைந்த கோயில் எதுவென்றால் அது இந்த சூரியனார் கோவில் தான். அதுவும் சூரிய பகவான் தனது இரண்டு மனைவிகளுடன் திருமண கோலத்தில் இருப்பதே சிறப்பு என்றே சொல்லப்படுகிறது. அதுவும் சூரியபகவான் உக்கிரமாக இல்லாமல் சாந்தமாக காட்சி தருவது மற்றொரு சிறப்பு ஆகும். 

இதையும் படிங்க:   ஸ்வஸ்திக் வடிவவில் ஒரு அதிசய கிணறு! கேள்விப்பட்டு இருக்கீங்களா..? மிஸ் பண்ணாம போய் பாருங்க!

இந்தப் புனித தலத்தில் கிரகங்கள் அனைத்திற்கும் தனித்தனி சன்னதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், யாருக்கும் வாகனங்கள் இல்லை. இருந்தபோதிலும், இங்குள்ள நவகிரகங்கள் அனைத்தும் அனுக்கிரகமாக காட்சி தருவது மிகவும் சிறப்பானது.

சூரியனார் கோவிலை குலோத்துங்க சோழ மன்னன் காலத்திலும், கிரகங்களுக்குரிய தனிக் கோயில்கள் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறுகின்றனர். தற்போது, இந்த கோயில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானது.

சிறப்புகள்:
தீராத நோயால் அவதிப்படுபவர்களும் ஏழரை சனி ஜென்ம சனி அஷ்ட சனி ஆகியன உள்ளவர்களும் நவகிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கோயிலில் வந்து சூரிய பகவானை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios