தலைகீழாக விழும் கோபுர நிழல்… விருபாட்சர் கோயிலில் நீடிக்கும் மர்மம்!!
கர்நாடகா அருகே இருக்கு கோயில் ஒன்றில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக காட்சியளிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடகா அருகே இருக்கு கோயில் ஒன்றில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக காட்சியளிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பழங்கால கோயிகளில் ஏராளமான மர்மங்களும் ஆச்சரியங்களும் அடங்கியிருக்கும். கோயில் கோபுரங்களில் தொடங்கி அதன் கட்டமைப்புகள் வரை அனைத்தும் பல்வேறு சிறப்புகளை கொண்டிருக்கும். அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் ஹம்பி எனும் பகுதியில் இருக்கும் விருபாட்சர் கோயில்ல் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னம் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்வி மனதில் எழலாம்.
இதையும் படிங்க: இந்த வார ராசி பலன்! (19th to 25th December 2022)
இந்த கோயிலின் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் என்பதே இந்த கோயிலின் மர்மம். எத்தனை படையெடுப்புகள் வந்தாலும் கோயிலை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே இதன் சிறப்பம்சம் கோவிலின் மையத்தில் அமைந்துள்ள ரங்க மண்டபம் என்று அழைக்கப்படும் மைய மண்டபம் 1510 ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. 1565ஆம் ஆண்டு கோயில் அமைந்திருக்கும் நகரம் அழிந்த போதிலும் விருபாட்சர் கோயில் அப்படியே இருந்ததாம். மேலும் இங்கு உள்ள கல்வெட்டுகள் மற்றும் சில ஆதாரங்கள் இந்தக் கோயில் சாளுக்கிய மற்றும் ஹொய்சால வம்சத்தினரின் கட்டியதாக உறுதிபட்டை தெரிவிக்கின்றது.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் சாமானம் முதல் பிஞ்சுபோன செருப்பு வரை- பொருளாதார முன்னேற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்..!!
இந்த கோவிலை சுற்றிலும் சிறிய கோயில்கள், தூண் மண்டபங்கள், கொடிக்கம்பங்கள், விளக்கு கம்பங்கள் போன்றவைகளை வைத்து ஒரு நகரத்தை போல அமைத்துள்ளனர். இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட இந்த கோயிலில் மர்மும் உள்ளது. அது என்னவெனில் இந்த கோயில் கோபுரத்தின் நிழல் ஒரு சிறிய அறையில் தலைகீழாக விழுகிறது. ஆனால் அது எப்படி நிழல் தலைகீழாக விழுகிறது என்பது குறித்து பல ஆராய்ச்சிகள் செய்த போதிலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அறிவியல் கூற்றுப்படி கோபுரத்திற்கும் சுவருக்கும் இடையே இருக்கும் ஒரு துளையில் லென்ஸ் போல செயல்பட்டு நிழலை தலைகீழாக மாற்றிக்காட்டுவதாக கூறப்படுகிறது.