அந்தரத்தில் தொங்கும் தூண்.. ஆந்திரா கோயிலின் மர்ம பின்னணி தெரியுமா?
Hanging Pillar : ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில் தூண் தரையை தொடாமல் அந்தரத்தில் உள்ள மர்மம் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.
ஆந்திராவில் இருக்கும் அனந்தபூரில் உள்ள வீரபத்ரா லேபக்ஷி கோயில் தான் அந்த அதிசய தூண் உள்ளது. இந்தக் கோயில் வடிவமைப்பு முழுவதும் விஜயநகர பாணியில் அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டின் கல்லால் செதுக்கப்பட்ட இக்கோயிலில் சுமார் 70 தூண்கள் காணப்படுகின்றன. அதில் ஒரு தூண் தான் அந்தரத்தில் தொங்கும் தூணாகும்.
பொதுவாக கோயில் கல் தூண் என்றால் தரையோடு சேர்த்து கட்டியிருப்பார்கள். ஆனால் வீரபத்ரா கோயிலில் உள்ள தூண் மண்ணை தொடாமல், காற்றில் நிற்கிறது. இது எந்த வகையில் சாத்தியம் என பல ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்தும் விடை கிடைக்கவில்லை. அப்படி அந்த தூணில் என்ன இருக்கிறது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் மர்ம கிணறு.. அச்சச்சோ! இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா?
பண்டைய இந்திய கட்டிடக்கலைக்கு சான்றாக வீரபத்ரா கோயில் என அழைக்கப்படும் லேபக்ஷி கோயில் விளங்குகிறது. விஜயநகரப் பேரரசின் கட்டடக்கலைக்கு சிறந்த உதாரணம். இங்குள்ள சுவர்களில் இசைக்கலைஞர்கள், புனிதர்களுடைய உருவங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அழகிய நடனமாடும் விநாயக பெருமான், பார்வதி தேவி, சிவபெருமானையும் சுவரோவியங்களில் காணலாம்.
அகஸ்திய முனிவர் வசித்ததாகக் சொல்லப்படும் குகை கூட இங்கு அமைந்துள்ளது. தெலுங்கில் ஆமை மலை என சொல்லப்படும் தாழ்ந்த மலையில் தான் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது வீரபத்ரா கோயில் அகஸ்திய முனிவரால் கட்டப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. சீதையை மீட்க ராவணனுடன் போரிட்ட பின் ஜடாயு இந்த இடத்தில் விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. இக்கோயிலில் சீதையின் காலடித் தடமும் உள்ளது இன்னும் சிறப்பானது.
இதையும் படிங்க: Mystery : பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் ரகசியம் என்ன? குவிந்து கிடக்கும் தங்கத்தின் மதிப்பு எவ்வளவு.?
அந்தரத்தில் தொங்கும் தூண்:
காண்போரை அதிசயிக்க வைக்கும் தொங்கும் தூணின் வடிவமைப்பு வித்தியாசமானது. தூணின் அடிப்பகுதிக்கும், தரையில் உள்ள பாறைக் கல்லுக்கும் இடையே மெல்லிய இடைவெளி உள்ளது. அது எப்படி சாத்தியம் என்பது இன்றும் யாராலும் கண்டறியமுடியாத மர்மமாக உள்ளது. தூணின் அடியில் ஏதேனும் மெல்லிய பொருள்களை நீங்கள் வைத்து அதனை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு கொண்டு வர முடியும். இது எப்படி என பலரும் ஆய்வில் ஈடுபட்ட நிலையில், இப்போது அதன் பழைய நிலையில் இருந்து கொஞ்சம் மாறுபட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்த கோயில் மர்மத்தை விலக்க நினைத்த பிரிட்டிஷ் பொறியாளர் ஒருவர், இந்த தூணை நகர்த்த முயன்றார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் தூண் அதன் பழைய நிலையில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. எத்தனை ஆராய்சியாளர்கள் வந்தாலும் தொங்கும் தூண் மர்மத்தை யாராலும் கண்டறிய முடியவில்லை. உண்மையில் லெபக்ஷி கோயில் விஜயநகர கட்டிடக் கலையின் அற்புதம் எனலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D