இந்த ஆண்டு மே மாதத்தில் வரும் முக்கிய ஆன்மீக நிகழ்வுகளை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மே மாதத்தில் தான் சித்ரா பௌர்ணமி, மதுரை சித்திரை திருவிழா போன்ற முக்கிய ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறும். எனவே இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் எந்தெந்த நாளில் என்னென்ன ஆன்மீக நிகழ்வுகள் நடைபெறவுள்ளது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

மே மாதத்தில் வரும் முக்கிய ஆன்மீக நிகழ்வுகள்:

நாள்கிழமைஆன்மீக நிகழ்வுகள்
மே 1 வியாழன் கிழமை வளர்பிறை சதுர்த்தி விரதம், வார்த்தாகவுரி விரதம்
மே 2வெள்ளிக்கிழமை வளர்பிறை பஞ்சமி, ஸ்ரீமத்ஷங்கர் ஜெயந்தி, லாவண்ய கௌரி விரதம், திருவள்ளூர் வீரராகவர் விழா
மே 3சனிக்கிழமைசஷ்டி விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் வேடர் பரி லீலை
மே 4ஞாயிற்றுக்கிழமைஅக்னி நட்சத்திரம், சுப முகூர்த்தம், வளர்பிறை சப்தமி
மே 5திங்கள் கிழமை வளர்பிறை அஷ்டமி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் நந்தீசுவரயாளி வாகனத்தில் புறப்படுதல்
மே 6செவ்வாய்க்கிழமைவளர்பிறை நவமி, வாசவி ஜெயந்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் பட்டாபிஷேகம்
மே 7புதன்கிழமைவளர்பிறை தசமி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் விஜயம் செய்தருளல்
மே 8வியாழன் கிழமைவளர்பிறை ஏகதாசி விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், 
மே 9வெள்ளிக்கிழமைசுபமுகூர்த்த நாள், பரசுராம துவாதசி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் ரத்தோற்சவம்
மே 10சனிக்கிழமைசனி பிரதோஷம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி விருஷப சேவை, 
மே 11ஞாயிற்றுக்கிழமைசுப முகூர்த்த நாள், நரசிம்ம ஜெயந்தி, 
மே 12திங்கள் கிழமைசித்ரா பௌர்ணமி, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்துருதல், புத்த பூர்ணிமா, அர்த்தநாரீஸ்வரர் விரதம், சம்பத் கௌரி விரதம்
மே 13செவ்வாய்க்கிழமைதிருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் தேனூர் மண்டபர் எழுந்தருளி, மண்டுக மகரிஷிக்கு மோட்சமருளுதல்
மே 14புதன்கிழமைசுபமுகூர்த்த நாள், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலை மோகனாவதாரம்
மே 15வியாழன் கிழமைவிஷ்ணுபதி புண்ணிய காலம
மே 16வெள்ளிக்கிழமைசுபமுகூர்த்த நாள், தேய்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி
மே 17சனிக்கிழமைதேய்பிறை பஞ்சமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளுவர் வீரராகவப்பெருமாள், கருட தரிசனம்
மே 18ஞாயிற்றுக்கிழமைதேய்பிறை சஷ்டி விரதம், சுபமுகூர்த்த நாள், திருவோண விரதம், முருகப்பெருமானை வழிபடுதல்
மே 19திங்கள் கிழமை சுபமுகூர்த்த நாள், தேய்பிறை சப்தமி
மே 20செவ்வாய்க்கிழமைதேய்பிறை அஷ்டமி 
மே 21புதன்கிழமைதேய்பிறை நவமி, கரிநாள்
மே 22வியாழன் கிழமைதேய்பிறை தசமி, சுவாமிமலை முருகப்பெருமாள் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம் செய்தல்
மே 23வெள்ளிக்கிழமைதேய்பிறை சர்வ ஏகத்தாசி விரதம், சுபமுகூர்த்த நாள்
மே 24சனிக்கிழமைசனி பிரதோஷம், தேய்பிறை துவாதசி, திருப்பதி ஏழுமலையான் கந்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளுதல்
மே 25 ஞாயிற்றுக்கிழமைமாத சிவராத்திரி, சூரிய வழிபாடு
மே 26திங்கள் கிழமைதேய்பிறை சதுர்த்தி, சர்வ அமாவாசை, கார்த்திகை விரதம்
மே 27செவ்வாய்க்கிழமை திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், கௌரி விரதம்
மே 28புதன்கிழமைவளர்பிறை பிரதமை திதி, அக்னி நட்சத்திரம் முடிவு, சுப முகூர்த்த நாள்
மே 29வியாழன் கிழமைமாதவி விரதம்
மே 30வெள்ளிக்கிழமைவளர்பிறை சதுர்த்தி விரதம், கரிநாள்
மே 31சனிக்கிழமைகரிநாள், வளர்பிறை பஞ்சமி திதி, கருட தரிசனம்

மே மாதத்தில் பல ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற உள்ளது. ஆன்மீக ரீதியாக உங்களை இணைத்துக் கொள்ள விரும்புபவர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுங்கள்.