Asianet News TamilAsianet News Tamil

மாத சிவராத்திரி 2023: எப்போது சிவ பூஜை செய்தால் முழு பலன் கிடைக்கும்.. யார் செய்யலாம்?

இந்து சமயத்தினர் ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்தசி திதி நாளில் கிருஷ்ண பக்‌ஷத்தில் மாத சிவராத்திரி வழிபாடு செய்கின்றனர்.

masik shivaratri date and time in tamil
Author
First Published Jan 20, 2023, 12:24 PM IST

சிவன், சக்தியுடன் இணையும் விழாவை மகா சிவராத்திரி என்பர். அன்றைய தினத்தில் தான் உமையம்மை சிவபெருமானை பூஜித்து அவரது அருளை பெற்றதாக ஆகமங்களும் புராணங்களும் சொல்கின்றன. இந்த சம்பவம் மாசி மாதத்தில் நிகழ்ந்ததால், அப்போது வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என்றும் பிற மாதங்களில் வருவது மாத சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. மற்ற மாதங்களில் வரும்  சிவராத்திரியில் விரதம் இருக்க முடியாதவர்கள், மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியில் விரதமிருந்தால் ஓராண்டு பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

இந்து சமயத்தினர் ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்தசி திதி நாளில் கிருஷ்ண பக்‌ஷத்தில் மாத சிவராத்திரி வழிபாடு செய்கின்றனர். மகா சிவராத்திரி அன்று செய்வது போலவே சிவ பக்தர்கள் விரதமும் கடைபிடிக்கின்றனர். மகா சிவராத்திரி என்பதை, சிவபெருமானின் சிறந்த இரவு என்று கூறுகின்றனர். இந்து மத நம்பிக்கைகளின்படி, மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமான் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இக்காட்சியை முதல் முதலாக விஷ்ணுவும், பிரம்மனும் தான் கண்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மாத சிவராத்திரியன்று நோன்பில் ஈடுபட்டு பிரார்த்தனை செய்பவர்களின் வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். 

மாத சிவராத்திரி 2023 

இந்தாண்டின் முதல் மாத சிவராத்திரி இன்றைய தினம் (ஜன.20) கடைபிடிக்கப்படுகிறது. 

மாத சிவராத்திரியில் சுப முகூர்த்த நேரம் 

2023ஆம் ஆண்டு மாத சிவராத்திரியில் சுப முகூர்த்த நேரம், சதுர்தசி திதி வெள்ளிக்கிழமையான இன்று (ஜன.20) காலை 9.59 மணிக்கு தொடங்கி நாளை (ஜன. 21) காலை 6.17 மணிக்கு முடிவடைகிறது. 

சிவ பூஜைக்கு முகூர்த்த நேரம் 

நாளை (ஜனவரி 21) காலை 12.11 முதல் மதியம் 1.04 மணி வரையாகும்.

பூஜை விதிகள்

மாத சிவராத்திரி அன்று அதிகாலையில் குளித்து தூய்மையான பிறகு சிவன் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும். சிவபெருமானுக்கு இனிப்பு வகைகளை படையலாக வைக்கலாம். கூடவே பழங்கள் வைப்பது சிறந்தது. சிவன் சாலிஸம் உச்சரிக்க வேண்டும். மதா சிவராத்திரி அன்று காலை முதல் நோன்பிருந்து மாலையில் உலர் பழங்கள், பால், பால் சார்ந்த பொருட்களை உண்டு நோன்பை முடிக்கலாம். கோதுமை பண்டங்களும் உண்பதால் தவறில்லை. விரதம் முடித்து உண்ணும் பொருள்களில் உப்பு சேர்க்கக் கூடாது. 

இதையும் படிங்க: பித்ரு சாபம் நீக்கும் தை அமாவாசை தர்ப்பணம்.. எந்த நேரத்தில் செய்ய வேண்டும்? தானம் அருளும் புண்ணியம்

மந்திரங்கள் 

சிவராத்திரி என்பது சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். அன்றைய தினம் இரவில் 'ஓம் நமசிவாய' என பிரார்த்தனை செய்து சிவனை மனமுருகி வழிபடுபவர்களும், மஹாமிருதஞ்சய் மந்திரத்தை உச்சரிப்பவர்களும் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெறுவார்களாம். 

மாத சிவராத்திரி முக்கியத்துவம்

கணவனுக்காம மாத சிவராத்தியன்று விரதம் இருப்பார்கள். திருமணமான பெண்கள் நோயில்லாத நீண்ட ஆயுள் கணவனுக்கு கிடைக்க விரதம் இருப்பார்கள். நல்ல கணவர் வேண்டி கன்னிப் பெண்கள் விரதம் மேற்கொள்வர். சிவனை வழிபட்டால் துன்பங்கள் விலகும். 

இதையும் படிங்க: தை அமாவாசையில் இதை தானம் செய்யுங்க.. சனீஸ்வர் அருளை வாரி வழங்குவார்

Follow Us:
Download App:
  • android
  • ios