மார்கழி மாதத்தில் வரும் பண்டிகைகள், விரதங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததும் மார்கழி என்பது ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது.. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ண பகவானே கீதையில் கூறியிருக்கிறார். இந்த மார்கழி மாதத்தில் தான் திருமாலை போற்றும் வைகுண்ட ஏகாதசி விழாவை வைணவர்கள் கொண்டாடுகின்றனர். திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்களை பாடி தொழுது திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடுகின்றனர்.
மேலும் பண்டிகைகள் நிறைந்த மாதமாகவும் மார்கழி இருக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு என கொண்டாட்டங்கள் நிறைந்த மார்கழி மாதத்தில் வரும் பண்டிகைகள், விரதங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மார்கழி மாதத்தில் வரும் பண்டிகைகள் மற்றும் விரத நாட்கள் :
- மார்கழி 01 (டிசம்பர் 17) – சஷ்டி, சபரிமலை நடை திறப்பு
- மார்கழி 02 டிசம்பர் 18 – சோமவார விரதம்
- மார்கழி 06 டிசம்பர் 22 வைகுண்ட ஏகாதசி விரதம்
- மார்கழி 07 டிசம்பர் 23 வைகுண்ட ஏகாதசி விரதம்
- மார்கழி 08 டிசம்பர் 24 கார்த்திகை விரதம், பிரதோஷம்
- மார்கழி 09 டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை
- மார்கழி 10 டிசம்பர் 26 பௌர்ணமி பண்டிகை
- மார்கழி 11 டிசம்பர் 17 திருவாதிரை விரதம் / ஆருத்ரா தரிசனம்
- மார்கழி 14 டிசம்பர் 30 சங்கடஹர சதுர்த்தி
- மார்கழி 16 ஜனவரி 01 ஆங்கில புத்தாண்டு
- மார்கழி 22 ஜனவரி 07 ஏகாதசி
- மார்கழி 24 ஜனவரி 09 பிரதோஷம்
- மார்கழி 26 ஜனவரி 11 அமாவாசை
- மார்கழி 27 ஜ்னவரி 12 சந்திர தரிசனம்
- மார்கழி 28 ஜனவரி 13 திருவோணம்
- மார்கழி 29 ஜன்வரி 14 போகி பண்டிகை
மார்கழி திருவாதிரை விரதம் எப்போது? தேதி, நேரம், முக்கியத்துவம்.. எப்படி விரதம் இருப்பது?
