மார்கழி திருவாதிரை விரதம் எப்போது? தேதி, நேரம், முக்கியத்துவம்.. எப்படி விரதம் இருப்பது?
ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரம் வந்தாலும், ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது.
ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் 2 நட்சத்திரங்களுக்கு மட்டும் தான் ‘திரு’ என்ற அடைமொழி வரும். ஒன்று சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம், மற்றொரு பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரம். ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரம் வந்தாலும், ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது.
பல சிவாலயங்களில் மார்கழி மாத திருவாதிரை விழா 10 நாட்கள் உற்சவமாக விமர்சையாக கொண்டாடப்படும். இதில் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளன்று சிவபெருமானின் தாண்டவ கோலத்தை தரிசிப்பது தான் ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதன்படி 2023-ம் ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனம் அல்லது திருவாதிரை விழா இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஆண்டின் இறுதியில் மீண்டும் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் வருகிறது. எனவே தற்போது வர உள்ள ஆருத்ரா தரிசனம், தேதி, நேரம், விரத முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆருத்ரா தரிசனம் 2023 தேதி, நேரம் :
மார்கழி திருவாதிரை நட்சத்திர தினத்தன்று சிவாலயங்களில் மகா அபிஷேகமும், திருவிழாவும் நடைபெறும்.
டிசம்பர் 27,2023 (மார்கழி 11) அன்று ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு மார்கழி மாத பௌர்ணமி டிசம்பர் 26 தொடங்கி டிசம்பர் 27 காலை முடிகிறது. திருவாதிரை நட்சத்திரம் டிசம்பர் 27 முழுவதும் இருக்கிறது.
மார்கழி திருவாதிரை விரதமுறை :
ஆருத்ரா தரிசனத்தன்று விரதம் இருப்பது திருவாதிரை நோன்பு என்று அழைக்கப்படுகிறது. பெண்கள் திருவாதிரை நோன்பு இருந்தால் அவர்கஓன் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருவாதிரை விரதம் மேற்கொள்ளும் பெண்கள் டிசம்பர் 27 அண்டு அதிகாலை எழுந்து குளித்துவிட்டு விரதத்தை தொடங்கலாம்.
மார்கழி மாதத்தில் என்னென்ன காரியம் செய்யலாம், செய்யக் கூடாது தெரியுமா?
அன்றைய தினம் சிவாலயங்களில் நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ளலாம். பூஜையில் கலந்து கொள்ள முடியாதவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்யலாம். திருவாதிரை விரதத்தன்று செய்ய வேண்டிய திருவாதிரை களியை நைவேத்யமாக படைத்து, 18 வகை காய்கள் சேர்த்து சாம்பார் வைக்க வேண்டும்.
பின்னர் 6 மணிக்கு தீபம் ஏற்றி முப்பெரும் தேவியரை வணங்கி படையல் போட்டு சிவபெருமானை வணங்கிவிட்டு அதை கணவருக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். மேலும் அன்றைய தினம் யாருக்காவது உணவு அளிக்க வேண்டும். இந்த திருவாதிரை நோன்பு இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.