Chevvai Dosham Remedy in Tamil ; பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில் செவ்வாய் தோஷத்திற்கும் சிறந்த நிவர்த்தி தலமாகக் கருதப்படுகிறது

Chevvai Dosham Remedy in Tamil ; திருமணத்தடை மற்றும் செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய கோயில் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதாவது, கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரம் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோயில் தான் இதற்கெல்லாம் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலின் ஒரு பகுதி தான் பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்க்கை அம்மன். இங்கு துர்க்கை அம்மன் சாந்த சொரூபியாக, மகிஷன் தலைமீது நின்று, திரிபங்க போஸில் 8 கரங்களுடன் காட்சி தருகிறார். மிகப் பழமையான கோயில் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடல் பாடப்பட்ட திருத்தலம் என்று கூறப்படுகிறது.

கோயிலின் அமைப்பு: 

ஐந்து நிலை கோபுரங்களை கொண்டது. ஏழு அல்லது ஆறாம் நூற்றாண்டில் தோன்றியதாக இருக்கலாம். பல காலங்களில் இந்த ஆலயம் பல்லவர்கள். சோழர்கள் மற்றும் நாயக மன்னர்களால் கட்டப்பட்டதாகும். சோழ மன்னரை இந்த ஆலயத்தில் தாம் வணங்கி வந்த துர்கையின் சிலையைக் கொண்டு வைத்ததாக கூறப்படுகிறது. சோழ மன்னருக்கு குலதெய்வம் ஆக இருந்தது துர்க்கை அம்மன் தான் என்றும் தன் அரண்மனைக்கு பாதுகாப்பாகவும் துர்க்கைஅம்மன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. துர்க்கை அம்மனின் சன்னதிக்குப் பின்புறமாக ஞானவாபி குளம் உள்ளது. அதன் கரைகளில் நாக தோஷத்தை நீக்கிக் கொள்ள நாகர்கள் அதாவது நாகங்களின் சிலைகள்அமர்ந்து உள்ளன. அதன் எதிரில்தான் கொடிமர விநாயகரும் சன்னதியில் அமர்ந்து உள்ளார். அதன் பின்புறத்தில் உள்ள நுழை வாயில் வழியே சென்றால் ஞானாம்பிகை மற்றும் பட்டீஸ்வரர் தனி சன்னதிகள் உள்ளன.மிகப் பெரிய பைரவர் சன்னதி உள்ளது.

ராகு பகவானுக்கு அன்னையாக விளங்கும் துர்க்கை அம்மன்: 

ராகு பகவானுக்கும் தாயாராகவே காட்சி தருகிறாளாம். ஆகவே ராகு பகவான் தினமும் இங்கு வந்து தனது அன்னையான துர்காவை பூஜிப்பதினால் ராகு பகவானின் பூஜை காலமான அந்த ராகு காலத்தில் வந்து எவர் ஒருவர் துர்கையை பூஜிக்கின்றார்களோ அவர்களை தனது தாயாரான துர்கையின் பூசையுள் தன்னுடன் கலந்து கொள்ளும் பக்தர் எனக் கருதும் ராகு பகவான் அவர்களுக்கு எந்தக் கெடுதல்களையும் செய்யாது நல்லதே செய்வதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் இந்த தளத்தில் ராகு காலத்தில் வந்து பூஜைகளை செய்து துர்கை வேண்டுவது வழக்கமாக உள்ளது. அது மட்டும் அல்லாது செய்வாய் கிரகமும் இங்கு வந்து அன்னைக்கு சிவப்பு பூக்களைப் போட்டு பூஜிக்கின்றார். அதனால்தான் இந்த துர்க்கைக்கு சிவப்பு மாலை சாத்தி வேண்டிக் கொண்டால் செய்வாய் தோஷமும் விலகும். அத்தகைய சக்தி வாய்ந்த மற்றும் நம் காவல் தெய்வமாக இருக்கும் துர்க்கைஅம்மன் மிகுந்த சிறப்பாக இக்கோயிலில் விளங்குகின்றார்.

பலன்கள்: 

ராகு தோஷத்திலிருந்து விடுபட துர்க்கை அம்மனை தரிசித்தால் அதுவும் ராகு காலத்தில் வந்து தரிசித்தால் விரைவில் ராகு தோசத்திலிருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. நாக தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு இங்கு வந்து திருக்கைமணி தரிசித்துச் சென்றால் விரைவில் விலகும் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு ராகு , செவ்வாய் தோஷம் மற்றும் நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமும் செய்யப்பட்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது.

திருமணத்தடை இருப்பவர்களுக்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள் விலகி விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கையை மன நிம்மதி தீராத நோய்களும் ஒரு எலுமிச்சை மாலை மூலம் இங்கு தீர்க்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.