சரண கோஷம் முழங்க பொன்னாம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் குவிந்த பக்தர்கள்!
பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் சாமி பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தந்தார். மூன்று முறை ஜோதியாகத் தோன்றி அருள் பாலித்த ஐய்யப்பனை லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் முழங்க கண்டுகளித்தனர்.
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. அதிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி முடிந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலைக்கு 33 லட்சத்துக்கும் அதிகமாக அய்ப்ப பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்தனர். 2 நாட்களுக்குப் பிறகு மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.
மகர விளக்கு பூஜை நாட்களில் பக்தர்கள் திரளாக சபரிமலை நோக்கி படையெடுத்தனர். தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை அய்யப்பனை தரிசனம் செய்தார்கள். இந்நிலையில், நெரிசலைத் தவிர்க்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. மகரஜோதி தரிசன நாளில் 40 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மோடி ஆட்சியில் மக்கள்தொகையில் ஏழைகள் எண்ணிக்கை 24.82 கோடி குறைவு: நிதி ஆயோக் தகவல்
இந்நிலையில், மகரவிளக்கு பூஜையின் சிகர நிகழ்வான மகரஜோதி தரிசனம் 6.48 மணிக்கு நடந்தது. பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் சாமி பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தந்தார். மூன்று முறை ஜோதியாகத் தோன்றி அருள் பாலித்த ஐய்யப்பனை லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் முழங்க கண்டுகளித்தனர்.
சபரிமலை, பாஞ்ச்சாலி மேடு, புல்லுறுமேறு, சரங்குத்தி, மரக்கூட்டம், பண்டிதாளம் ஆகிய இடங்களில் மகரஜோதி தெரிந்தது. அரசன் போல ஆபரணங்கள் அணிந்து காட்சியளிக்கும் அய்யப்பனை தரிசனம் செய்து பக்தர்கள் பக்தியில் திளைத்தனர். பம்பை மற்றும் சன்னிதானத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களை வழிநடத்தும் பெண்கள்! 8 ஆண்டுகளில் 'ஸ்டார்ட்அப் இந்தியா'வின் சாதனை!